கம்பராமாயணம் 5391 · சுந்தர 5.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் சேனை - இராமபிரானின் சேனை: எழுபது வெள்ளம் உளது அன்றோ - எழுபது வெள்ளம் ஆக இருக்கிறதல்லவா; பள்ளம் - ஆழமான; இ வேலை - இந்தக் கடலானது (அச்சேனை); ஒரு கை நீர் - ஒரு கையளவான தண்ணீரை; அள்ளிக் குடிக்க - அள்ளிப் பருக; சாலும் பான்மையதோ - போதுமான இயல்பை உடையதா; கள்ள அரக்கர் - வஞ்சகம் உடைய அரக்கர்களின்; கடி இலங்கை - காவலுடன் கூடிய இலங்கையானது (உள்ள இடம்); காணாது - இராமபிரானால் அறியப்படாமல்; ஒழிந்ததால் அன்றோ - விலகியிருந்ததால் அல்லவா; உள்ளதுணையும் - காணாமை உள்ள அளவும்; உளது ஆவது - இருப்பதாய் இருக்கிறது; அறிந்த - அறியப்பட்டால், பின்னும் - மறுபடியும்; உளதாமோ - அழியாமல் இருக்குமா.
சேனையைக் குறிக்கும் பேரெண் வெள்ளம். எட்டு மாகடல் கொண்டது வெள்ளம் என்று கையேடு குறிக்கிறது. வானர சேனை எழுபது வெள்ளம். 'ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற' என்றும் 'வெள்ளம் ஒர் ஏழுபத்து' என்றும் (கம்ப. 4448, 6974) குரக்குச் சேனை குடித்தாலே கடல் வற்றும் என்க. இதுவும் என்பதில் உள்ள 'உம்' அசை (குறள் 1164) உறை இந்தக் கடலைக் கண்டு அஞ்ச வேண்டா என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is not the hero's army seventy veḷḷam strong? This sea,
- this deep hollow, is it even enough for them to scoop up one handful each and drink?
- Only because the guarded Ilaṅkai of the treacherous demons has gone unseen
- does it stay in being so long; once it is known, will it still be?
What the poem says
A veḷḷam is a vast number used for counting armies, and Irāmaṉ's monkey army numbers seventy of them. If every monkey drank just one handful, the ocean would be dry, so the sea is no barrier.
Ilaṅkai survives only because Irāmaṉ does not yet know where it is. Once he does, it will not last.