கம்பராமாயணம் 5395 · சுந்தர 6.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடியேன் உரை - அடியேனின் மொழியை கேட்டி - கேட்பாயாக (அம்மொழியை); முனிந்தருளல் - வெறுத்து ஒதுக்காதே; கேளாம் - ; வீட்டியிடுமேல் - உன்னைக் கொன்று விடுவானேயானால்; (பிறகு) அவனை - அந்த இராவணனை, வேறல் - வெல்வது; வினை அன்று - செய்யத்தக்கது அன்று; இனி - இப்போது; பல - பலவிதமான மொழிகளை; ஈட்டி என் - தொகுப்பதால் என்ன பயன்; இராமன் எதிர் - இராமபிரானுக்கு முன்னே; நின்னை - உன்னை; காட்டி - காண்பித்து; அடி தாழ்வென் - உங்கள் இருவரின் திருவடிகளையும் வணங்குவேன்; இதுகாண்டி - இதைப்பார்; காலம் இது - அதற்கு ஏற்ற காலம் இதுவே.
இது முதல் கவிதைகள் அனுமன் விண்ணப்பம். பிராட்டியை மீட்பதில் உறுதி கொண்டு அனுமன் பேசுகின்றான். இராவணன், உன்னைக் கொன்று விட்டால் பிறகு அவனை வெல்வதால் பயனில்லை என்று திருவடி வருந்தப் பேசியதில் அன்புமிக்குள்ளது. அதனால் ஆராய்ச்சித் திறம் குன்றியது. இதனைச் சேக்கிழார் 'காதலால்... உற்ற வருத்தம்' என்பர் (குங்குலியர் 26) ஒருவர்பால் ஒன்று சொல்ல விரும்புவார் தாம் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற ஐயம் உண்டாகிற போது மீண்டும் கேளாய் என மொழிதல் வழக்கமே - அனுமனும் முதலில் கேட்டி என்றவன் முனிந்தருளல் என்று கூறி மீண்டும் கேளாய் என்றது அறிக. வேறல் வினை அன்று என்பதற்கு இராவணனை வெல்வது என் செயல் அன்று என்று அனுமன் கூறியதாக விவரித்தலும் ஒன்று. காலம் என்றது சந்தர்ப்பத்தை. கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று (கம்ப. 6466)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hear the words of your servant; do not be angry; listen, mother!
- If he should kill you, then defeating him would be no deed worth doing;
- what use now in drawing this out? Before Irāmaṉ I will show you
- and bow at your feet; see this: this is the time!
What the poem says
Aṉumaṉ begs Cītai to listen without taking offence. If Irāvaṇaṉ kills her in the meantime, defeating him later will mean nothing.
He says there is no point in further talk: now is the moment to take her to Irāmaṉ. The commentary notes that his love for her makes him rush, and his repeated 'listen' shows a speaker who fears his plea will be refused.