கம்பராமாயணம் 5396 · சுந்தர 6.3

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் திணி - செறிந்த அழகையுடைய; பொலங்கொடி - தங்கக் கொடிபோலும் அம்மையே (நீ); மென்மயிர் - மென்மையான மயிர்; பொருந்தித் துன்றிய - அமைந்து நெருங்கிய; என் புயத்து - என் புயத்தின் கண்ணே; இனிது இருக்க - அமைதியாக இருக்க (அதனால்); துயர் விட்டாய் - துன்பத்தை விட்டவளாவாய் (அப்போது); இன்துயில் விளைக்க - (உனக்கு) இனிய உறக்கம் உண்டாக; உனைக் கொடு - உன்னைச் சுமந்து கொண்டு; இறைவைகும் - இராமபிரான் தங்கியுள்ள; குன்றிடை ஓர் இமைப்பின் குதிப்பென் - மலையில் ஓர் இமைக்கும் நேரத்தில் குதிப்பேன்; இடை கொள்ளேன் - நடுவில் தாமதம் செய்யேன்.

பொன் என்பதற்குப் பசப்பு என்றும் கூறலாம் (சிந்தாமணி 1530) இடை கொள்ளேன் என்பதற்குத் தளர்ச்சியடையேன் என்றும் பொருள் கூறலாம். இமைப்பு - கண்ணிமைக்கும் நேரம். இமைப்பின் எய்திட்டு (சிந்தா 1680) இராமபிரான் தங்கிய மலை பிரஸ்ரவனம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O golden creeper, dense with beauty! Settled on my soft fur,
  2. sit at ease on my thick shoulders: you will be free of sorrow,
  3. and sweet sleep will come; in a single blink, to the hill where the lord stays
  4. I will leap, carrying you; I will not pause on the way.

What the poem says

Aṉumaṉ continues his plea. Cītai need only sit comfortably on his furry shoulders, and in the blink of an eye he will jump with her to the mountain where Irāmaṉ is camped, Mount Prasravaṇa.

She will be so at ease that she may even fall into a sweet sleep on the way. 'I will not pause' can also mean 'I will not tire'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ tiṇi polaṅ koṭi! eṉ meṉ mayir poruntit
tuṉṟiya puyattu iṉitu irukka: tuyar viṭṭāy,
iṉ tuyil viḷaikka: or imaippiṉ, iṟai vaikum
kuṉṟiṭai uṉaikkoṭu kutippeṉ; iṭai koḷḷēṉ.