கம்பராமாயணம் 540 · பால 9.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் உரை இராமன் கூற - இவ்வாறு இராமன் கேட்க; அறிவனும் - முனிவனும் (அந்த வார்த்தைகளைக் கேட்டு); அவனை நோக்கி - இராமனைப் பார்த்து (கூறத் தொடங்கினான்); செவ்வியோய் - எல்லா நற்குணங்களும் உடையவனே! கேட்டி - (நான் கூறுவதைக் கேட்பாயாக; மேல்நாள் - முன்னொரு காலத்திலே; செறிசுடர்க் குலிசத்து - மிகுந்த ஒளியுள்ள வச்சிரப்படை ஏந்திய; அண்ணல் - பெருமை மிக்க இந்திரன்; அவ்வியம் அவித்த - பொறாமை முதலான தீய குணங்களை நீக்கிய; சிந்தை முனிவனை - மனம் படைத்த கெளதம முனிவர்; அற்றம் நோக்கி - (ஆச்சிரமத்தில்) இல்லாத சமயம் பார்த்து (அங்கே சென்று); நவ்வி போல் விழியினாள்தன் - மான் விழியாளான அகலிகையின்; வனமுலை நணுகல் உற்றான் - அழகிய தனங்களைச் சேர விரும்பினான்.
அகலிகை: படைப்புக்கடவுளான பிரமன் முன்பு படைத்த மக்களின் உடம்பிலுள்ள உறுப்பு அழகைச் சிறிது சிறிதாக எடுத்து அழகான ஒரு பெண்ணைப் படைத்தான். அவளுக்கு அஹல்யா என்னும் பெயரிட்டான். ஹலம், ஹல்யம் - அழகின்மை. அஹல்யா- அழகின்மை இல்லாதவள். அகலிகை வரலாறு: இந்திரன் இத்தகைய அழகிய பெண்ணுக்குத் தக்க கணவர்தானே என்று செருக்குக்கொண்டு அவளைத் தன் தாரமாகக் கருதினான். ஆனால் பிரமன் அவனது எண்ணத்தோடு மாறுபாடு கொண்டான். அதனால் அவளைக் கெளதமனிடம் தந்து, 'இவளை நீதான் பாதுகாக்கவேண்டும்' எனக் கூறி ஒப்படைத்தான். முனிவனும் அவளைப் பலகாலம் காத்துப் பிரமனிடம் சேர்த்தான். பிரமனோ அம்முனிவனின் சபலமின்மையையும், உயர்ந்த தவத்தையும் அறிந்து அவளை அம்முனிவனுக்கே மணம் புரிவித்தான். அதனால் பொறாமை கொண்ட இந்திரன் வேற்று வடிவத்திலே அவளைச் சேரமுற்பட்டான் என்பது வரலாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Irāmaṉ had spoken these words, the wise one looked at him:
- 'O gracious one, listen. Long ago the lord who bears the thunderbolt of massed light,
- watching for a time when the sage, whose mind had quenched all envy, was away,
- sought to come near the lovely breasts of her whose eyes were like a doe's.'
What the poem says
Vicuvāmittiraṉ begins the story. Indra, wielder of the thunderbolt, desired Akalikai. He waited for a time when her husband, a sage free of all envy and malice, was away from the hermitage.
The commentary gives the background. Brahmā made Akalikai by taking a little of the beauty of every creature he had made, and named her Ahalyā, "she in whom there is nothing unlovely." Indra thought himself the only fit husband for her, but Brahmā gave her into Kautamaṉ's keeping. When the sage returned her untouched after many years, Brahmā, impressed by his self-control, married her to him. Indra's jealousy led him to try to win her in disguise.