கம்பராமாயணம் 541 · பால 9.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தையலாள் நயன வேலும் - அகலிகையின் கண்களாகிய வேல்களும்; மன்மதன் சரமும் பாய - மன்மதனுடைய மலர் அம்புகளும் தன்மேல் பாய்வதனால்; உய்யல் ஆம் - (மிக வருந்தி) (அவளைச் சேர்ந்து அக் காம நோயிலிருந்து நீங்கிப்) பிழைக்கக் கூடிய; உறுதி நாடி -ஓர் உபாயத்தைத்தேடி; உழல்பவன் - அலைபவனான அந்த இந்திரன்; ஒருநாள் உற்ற மையலால் - ஒரு தினத்தில் அளவற்ற காம மயக்கத்தால்; அறிவு நீங்கி - நல்லறிவுகெட்டு; மாமுனிக்கு - பெருமையுள்ள அக்கெளதம முனிவனுக்கு; அற்றம் செய்து - பிரியுமாறு உண்டாக்கி; பொய்யிலா உள்ளத்தான்தன் - பொய்யில்லாத மனத்தையுடைய அம்முனிவனது; உருவமே கொண்டு - உருவத்தையே தான் எடுத்துக் கொண்டு; புக்கான் - அவனது ஆச்சிரமத்துள்ளே புகுந்தான்.
இந்திரன் நிலை: அகலிகையின் கண்களாகிய வேலும், மன்மதனின் காம பாணங்களும் ஒரே சமயத்தில் தாக்க, அக் காம மயக்கத்தால் அறிவை இழந்தான் இந்திரன். காமத்தால் வருந்திய அவன் அதிலிருந்து பிழைக்க, ஒரே வழி கெளதம முனிவன் உருவத்திலே சென்று அகலிகையைச் சேர்வதே என உறுதி கொண்டான். அதன் பொருட்டு அம்முனிவனை அப்பால் போகுமாறு தந்திரம் செய்கிறான். அம் முனிவனது வடிவிலே ஆச்சிரமத்திற்குள் நுழைகிறான். முனிக்கு அற்றம் செய்தல்: பொழுது புலர்வதன் முன்னே கோழி கூவுமாறு இந்திரன் செய்தான். கெளதம முனிவனும் காலைக் கடன் கழித்தற் பொருட்டு வெளிப்புறம் சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the lance-like eyes of that lady and the arrows of Kāma pierced him,
- he wandered, seeking some sure way to survive; and one day,
- his reason lost in the infatuation that had come upon him, he contrived the great sage's absence,
- and, taking the very form of that man whose heart held no falsehood, he went in.
What the poem says
Struck by Akalikai's eyes and by the arrows of Kāma together, Indra loses his judgement and decides that his only cure is to take her disguised as her husband. The commentary gives the trick. Indra made the cock crow before dawn, so Kautamaṉ, thinking it was morning, went out for his dawn rites. Indra then took the sage's form and entered the hermitage.