கம்பராமாயணம் 542 · பால 9.76

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புக்கு, அவளோடும் காமப் புது மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு, இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா
முக் கணன் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்.

பொருள் · Meaning in Tamil

புக்கு - (இவ்வாறு இந்திரன் முனிவனது உருவம் (கொண்டு) சென்று; அவளோடும் காமம் - அந்த அகலிகையோடு புதுக் கலப்பில் அமைந்த காமமாகிய, புதுமணம் மதுவில் தேறல் - மணமுள்ள மதுவின் தெளிவை; ஒக்க உண்டு இருத்தலோடும் - (இருவரும்) சமமாக அனுபவித்து கொண்டிருக்கும்போது; உணர்ந்தனள் - (தன்னோடு மகிழ்பவன் இந்திரனே என்ற) தவற்றை அறிந்தாள்; உணர்ந்த பின்னும் - (அவ்வாறு) அறிந்த பின்பும்; தக்கது அன்று என்ன - (இத்தீய செயல் தனக்குத்) தகுதியானதாக இல்லை என்று; ஓராள் - சிந்தனை செயலுக்குத் தானும் மனம் பொருந்தியவளாக இருக்க (அச் சமயத்தில்; தாழா முக்கணான் அனைய - (எந்த வகையிலும்) குறைவு இல்லாத முக்கண்ணனாகிய சிவனை ஒத்துள்ள; ஆற்றல் முனிவனும் - வல்லமை நிரம்பிய அம்முனிவனும், முடுகி வந்தான் - (தாழாமல்) விரைவாக மீண்டு தன் ஆச்சிரமம் வந்தான்.

அகலிகையும் இந்திரனும்: கெளதமன் உருவில் வந்த இந்திரனைத் தன் கணவன் என்றே நினைந்து அவனோடு கூடி மகிழ்ச்சியாக இருக்கையில் இது புது மண மது என்பதை உணர்ந்தாள்; அவ்வாறு உணர்ந்தும் அவள் இது தகுதியன்று என ஆராய்ந்து விலக்கக் கூடிய அறிவுத் திறனைப் பெறாமல் இழிந்த அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாள். அவ்வேளையில் முனிவன் விரைந்து வந்தான். ஏனெனில், தான் எழுந்து புறப்பட்டுப் போனது நள்ளிரவு என்றும், அவ்வாறு தான் செல்வதற்கு இந்திரன் வஞ்சனை செய்தான் என்றும், முனிவன் தன் ஞான உணர்வால் அறிந்ததே ஆகும். காமப் புதுமண மதுவின் தேறல்: பிறன் மனைவியை விரும்புதலும், கள்ளும், ஒழுக்கத்தையும் நல்லுணர்வையும் அழிப்பதில் ஒன்றோடு ஒன்று ஒத்துள்ளன. அதனால் இவ்வாறு கம்பர் உருவகப்படுத்தினார். முக்கணான் அனைய ஆற்றல் முனிவன்: அழிக்கும் தொழிலை நிறைவேற்ற நெற்றிக் கண்ணைத் திறந்துள்ள உருத்திர மூர்த்தியைப் போலச் சினம்கொண்டவனானான் கெளதமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He went in, and as he and she together drank the clear wine
  2. of the new honey of love, she knew; and even after she knew,
  3. she did not judge 'this is not right,' but stayed, sunk low; and the great sage,
  4. mighty as the unfaltering three-eyed god, came hurrying back.

What the poem says

This is the moral centre of Kampaṉ's telling. In the midst of their union Akalikai realises that the man is not her husband. Even then she does not have the clarity to see that it is wrong and stop. Kampaṉ calls the illicit love "the clear wine of new honey," because desire for another's spouse, like liquor, destroys good conduct and good sense.

Meanwhile Kautamaṉ, knowing through his spiritual insight that it was really midnight and that he had been tricked, rushes back, terrible as three-eyed Śiva about to destroy the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukku, avaḷōṭum kāmap putu maṇa matuviṉ tēṟal
okka uṇṭu, iruttalōṭum, uṇarntaṉaḷ; uṇarnta piṉṉum
takkatu aṉṟu eṉṉa ōrāḷ, tāḻntaṉaḷ iruppat, tāḻā
mukkaṇāṉ aṉaiya āṟṟal muṉivaṉum muṭuki vantāṉ.