கம்பராமாயணம் 5404 · சுந்தர 6.11

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நன்மொழி - நன்மைதரும் சொற்களை; ஏய - பொருத்தமாகவும்; எய்த - நன்றாகவும்; விளம்பிய - கூறிய; தாயின் முன்னிய - தாயை எதிரே கண்ட; கன்று அனையான் தனக்கு - இளங்கன்று போலும் அனுமனுக்கு; (பிராட்டியானவள்) ஆயதன்மை - நீ கூறிய அச்செயல்; அரியது அன்று - உன்னால் செய்ய முடியாதது அன்று; என - என்று கூறிவிட்டு; இனையன - இப்படிப்பட்ட, தூயமென்சொல் - தூய்மையான மென்மையான சொற்களை; சொல்லினாள் - கூறினாள்.

கன்று அனையான்தனக்குச் சொல்லினாள் என்று முடிக்க. ஆய தன்மை - அச்செயல். 'மான யானை..... என்ன தன்மை பண்ணுமே' (கம்ப. 9385) பிராட்டி பசுவைப் போல இருந்தாள். அனுமன் அதன் கன்று போல் இருந்தான் என்க. இராமபிரான் சிற்றன்னைபால் கொண்ட பாசம் 'அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்று' (கம்ப. 1598) என்னும் தொடரால் பேசப் பெற்றது. இவ்விருத்தம் மா - விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று வரும். இதனைக் கம்பன் அடிப் பொடி அவர்கள் 'கட்டளைக் கலிப்பா' என்றே குறிப்பார். நேர் - 11; நிரை - 12; (மணிமலர் 70)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To him who was like a calf that had seen its mother, who had spoken
  2. good words, fitting and well-aimed,
  3. saying, 'That deed is not too hard for you,'
  4. she spoke these pure, gentle words.

What the poem says

Cītai answers Aṉumaṉ, who has been speaking to her like a calf that has run to its mother cow. The commentary notes that the same image was used earlier for Irāmaṉ's love for his stepmother.

First she grants that he could certainly do what he proposes. The verses that follow explain why she still refuses. The metre changes here to a four-foot kalivirutham.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēya nalmoḻi eyta viḷampiya
tāyai muṉṉiya kaṉṟu aṉaiyāṉtaṉakku
'āya taṉmai ariyatu aṉṟāl 'eṉa
tūya meṉ col iṉaiyaṉa colliṉāḷ.