கம்பராமாயணம் 5403 · சுந்தர 6.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அம் சொல் இளவஞ்சி! - அழகிய சொற்களைப் பேசும் இளங்கொடி போல்வாய்! இனி - இப்போது; விளம்ப - கூறுவதற்கு; வேறு உளது அன்று - வேறுமொழிகள் இல்லை; இப்பேறு - இந்தப் பாக்கியத்தை; விதியால் பெற - முறைப்படி அடியேன் பெறுவதற்கு; என்கண் - அடியேன்பால்; அருள் தந்தருளு - திருவருளை வழங்கியருள்; பின் - அதற்குப்பின்; போய் - இராமபிரான் பக்கலில் போய்; துயர் ஆறு - துன்பத்தைத் தணிப்பாயாக. (அதன் பொருட்டு), அடியேன் தோள் கடிது ஏறு - அடியேனுடைய தோளில் விரைந்து ஆரோகணிப்பாயாக; என்று தொழுது - என்று கூறிப் பணிந்து; இன் அடி - நன்மைதரும் திருவடிகளை; பணிந்தான் - வணங்கினான்.
இன்அடி - நன்மைதரும் திருவடி. 'இனிய சிந்தை இராமன்' (கம்ப. 3061) 'சிந்திப்பவர்க்கு ..... செந்தேன் முந்திப் பொழிவன... அடித்தலம்' என்று அப்பர் பேசுவர். அதை ஒட்டி இனிய திருவடி என்றும் பொருள் கொள்ளலாம். விதி - முறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There is nothing else to say now; so that by right I may win
- this blessing, grant me your grace; then go and
- soothe your sorrow; O young creeper of lovely speech! Climb onto your servant's shoulder
- quickly!' So saying, he folded his hands and bowed at her sweet feet.
What the poem says
Aṉumaṉ ends his plea. He asks Cītai for the grace of being allowed to carry her, so that she can go to Irāmaṉ and end her grief, and he begs her to climb onto his shoulder at once.
Then he bows at her feet. The commentary says 'sweet feet' can mean feet that bring blessing, and recalls Appar's image of the Lord's feet pouring honey for those who think of them.