கம்பராமாயணம் 5402 · சுந்தர 6.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்து நுதல்! - சந்திரனை ஒத்த நெற்றியை உடைய அம்மையே; இகல் வீரன் - பேராற்றல் பெற்ற இராமபிரான்; (நின்னைப் பெற்றமையால்) சிந்தை உறு - மனத்திலே மிக்குள்ள; வெம்துயர் தவிர்ந்து - பெருந்துன்பம் நீங்கப் பெற்று; தெளிவோடும் - அறிவுத் தெளிவுடனே; நின்னொடு - உன்னுடன்; இவண் எய்தி - இந்த இலங்கையை அடைந்து. பின் - பிறகு, அந்தம் இல் - முடிவற்ற; அரக்கர்குலம் - இராக்கதர் கூட்டம்; அற்று அவிய நூறி - சிதைந்து அழியக் கொன்று; நந்தல் இல் - அழிவற்ற; புவிக்கண் இடர் - பூமியின்கண்ணே துன்பத்தை; களைதல் நன்று - களைந்தெடுப்பது சிறப்பானதாகும்.
பிராட்டி தான் சிறைமீட்சி பெற்றால் இராவணனை அழிப்பது நிகழாதே என்று கருதுவதாக முடிவுகட்டி, அனுமன் நீயும் இராமபிரானிடம் திரும்பி வந்து இராவணனை அழிக்கலாம் என்று கூறினான். இவண் ஏகி என்பதற்கு இந்த இலங்கையிலே பெருமானும் தேவரீரும் திரும்பி எழுந்தருளி என்பது பழைய வுரை (அடை-பதி) செயலற்ற சிவம் சத்தியுடன் சேரின் எத்தொழிலும் வல்லது என்று செளந்தரிய லகரி பேசும். (செளந்தரிய 7) அவண் எய்தி.... தெளிவோடும் என்னும் பாடத்திற்கு யான் உன்னுடன் இராமபிரான் இருக்குமிடத்தை அடைய, அதனால் அவன் தெளிவு பெற்று, எனப் பொருள் கொள்ள வேண்டும். எய்தி என்னும் செய்து என்னும் வாய்ப்பாட்டுச் சொல் செய என்னும் வாய்பாட்டுப் பொருளில் வந்ததாகக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O you of the moon-like brow! With you, reaching here, the warrior hero,
- freed of the cruel grief that fills his heart, with a clear mind,
- could smash the endless race of demons till it is wiped out,
- and afterwards clear away the trouble from the undying earth; that would be good.
What the poem says
Aṉumaṉ guesses that Cītai may worry that, if he rescues her now, Irāvaṇaṉ will never be punished. So he suggests that once she is with Irāmaṉ, Irāmaṉ, his grief gone and his mind clear, could come back with her and destroy the demon race.
The commentary compares this with the idea that Śiva is inactive until joined with his Śakti: Irāmaṉ united with Cītai can do anything.