கம்பராமாயணம் 5401 · சுந்தர 6.8

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அனுமனே நீ) மதில் சூழ் - மதில்களால் சூழப்பட்டு; கடி - காவலுடன்; இருக்கும் இலங்கையை - இருக்கின்ற இலங்கை மாநகரை; இமைப்பின் எரியால் உருக்கி - இமைப்பதற்குள் நெருப்பினாலே உருக்கி விட்டு (பின்); இகல் - மாறுபாடு கொண்ட; அரக்கனையும் - இராவணனையும்; ஒன்றா - ஒருசேர; முருக்கி - அழித்து; நிருதக் குலம் முடித்து - அரக்கர் கூட்டத்தை ஒழித்து; வினைமுற்றி - செயலை நிறைவு செய்துவிட்டு; பொருக்க - விரைவாக; அகல்க என்னினும் - இலங்கையைவிட்டு நீங்குக என்று கட்டளை இட்டாலும்; அது - அச்செயலை; இன்று புரிகின்றேன் - இப்பொழுது செய்வேன்.

இலங்கை பொன்னால் அமைந்தது ஆதலின் அதனை 'உருக்குக' என்று கட்டளை இட்டால் நிறைவேற்றுவேன் என்றான். 'ஆடகத்தாரைகள் உருகி வேலையின் ஊடு புக்குற்றன' என்று மேலே பேசப்படும் (கம்ப. 5953.) பொருக்க - விரைவாக. பொருக்க நும்வினை போயதும் (தேவாரம் - நாவரசர் 144-11) முடித்து - அழித்து. 'வேந்தர் குலமும்... குழலும் முடியாது இராள்' என்பர் வில்லியார் (கிருட்டினன் தூது 48)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Melt the guarded Ilaṅkai with its ringing walls in the blink of an eye
  2. with fire, and crush the hostile demon too, all at once,
  3. and end the race of the Niruthas, finish the task,
  4. and leave at speed', even if you say that, I will do it today.

What the poem says

Aṉumaṉ offers a different plan if Cītai prefers. Ilaṅkai is a city of gold, so he could melt it down with fire. He could kill Irāvaṇaṉ with all his race, the Niruthas, and be gone at once.

The commentary points out that this foreshadows what really happens later in the epic, when Aṉumaṉ sets Ilaṅkai alight and streams of molten gold run into the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'irukkum matil cūḻ kaṭi ilaṅkaiyai imaippiṉ
urukki eriyāl ikal arakkaṉaiyum oṉṟā
murukki nirutaṉ kulam muṭittu viṉai muṟṟip
porukka akalka 'eṉṉiṉum atu iṉṟu purikiṉṟēṉ.