கம்பராமாயணம் 5400 · சுந்தர 6.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அம்மையே) உயிர்க்கு உறுதிகொண்டேன் - உயிருக்குப் பாதுகாப்பைத் தேடிக் கொண்ட யான்; புண் தொடர்வு - போரால் உண்டாம் விழுப்புண்களின் சம்பந்தத்தை; அகற்றிய புயத்தினொடு - விலக்கிக் கொண்ட தோள்களுடன்; புக்கேன் - இராமபிரான் சந்நிதானத்தை அடைந்து; விண்டவர் வலத்தை - பகைவர்களின் பலத்தை; விரித்து உரை செய்கேனோ - விவரித்துப் பேசுவேனோ? (அல்லது) (யான்); கண்டு வருகிற்றிலென் - பிராட்டியைக் கண்டு வரும் ஆற்றல் பெற்றேன் இல்லை; (அதனால்) (பிராட்டியை) கொண்டு வருகிற்றிலென் - கொண்டு வரும் பாக்கியம் பெற்றேன் இல்லை; என கழறுகேனோ - என்று பொய் கூறுவேனா.
வலத்தையும் என்பதில் உள்ள 'உம்' அசை மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி (சிந்தா 1173) இங்கு இனியர் 'உம்மை அசை' என்று வரைந்தார். அரக்கர்கள் வன்மை உடையவர்கள் அதனால் பிராட்டியைக் கண்டிலேன்; அதனால் வெறுங்கையுடன் வந்தேன் என்று பொய் மொழி கூறட்டுமா என்று அனுமன் வருந்திக் கூறினான். உறுதி - பாதுகாப்பு. மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலரடி சுமந்து வாழ்தி (கம்ப. 4090)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shall I go in with shoulders kept free of any touch of wounds
- and describe at length the strength of the enemy?
- 'I could not bring her; I made sure to keep myself alive;
- I could not even find her!' shall I say this?
What the poem says
Aṉumaṉ imagines the shameful report he would have to make to Irāmaṉ if he left without Cītai. He would have to boast of the enemy's power with his own body unscratched, having looked after his own safety.
Or worse, he would have to lie and say he never found her at all. He refuses to do either.