கம்பராமாயணம் 5399 · சுந்தர 6.6

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருந்ததி - அருந்ததியே (யான்); அழகற்கு அருகு சென்று - இராமபிரான் பக்கலிலே போய்; உன் - உன்னுடைய மருந்து அனைய தேவி - அமுதம் போலும் தேவியானவள்; நெடு வஞ்சர் - மிக்க வஞ்சகக் குணமுடையவர்களின்; சிறை வைப்பில் - சிறையிடத்தில்; பெருந்துயரினோடும் - பெரிய துன்பத்துடன்; ஒரு - ஒப்பற்ற; வீடு பெறுகில்லாள் - விடுதலை பெறாதவளாய்; இருந்தனள் - இருந்தாள்; எனப் பகரின் - என்று கூறினால்; என் அடிமை - என்னுடைய தொண்டு; என் ஆம் - என்ன பயனுடையதாகும்.

செயலாக வெளிப்படாத தொண்டு பயனில்லை என்பது குறிப்பு. அருந்ததி போல்வாளை அருந்ததி என்றது ஆகுபெயர். இராமன் என்னும் சொல் அழகன் என்று தமிழ் வடிவம் பெறுகின்றது. வீடு விடுதலை. 'வீடு பெறல் யாது என விலங்கிழை வினவ' (பெருங்கதை 5-3-107) நெடுவஞ்சகர் - பெரிய வஞ்சகர். நெடு என்பது பெரிது என்னும் பொருள் தரும். 'நெடுவஞ்சமும், பாவமும் பொய்யும் வல்லநாம்' (கம்ப. 7350) நெடு என்பதைச் சிறைக்கு அடைமொழியாக்கி நீண்ட சிறை என்று உரை கூறினாரும் உளர். என் அடிமை என்னாம் என்ற இடத்து 'அடிமை சால அழகுடைத்தே' என்னும் திருவாசகம் நினைக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O Aruntati, tell me! If I go before the Beautiful One and say,
  2. 'Your queen, who is like a life-giving medicine, in the prison of the great deceivers,
  3. with great suffering, unable to win release,
  4. remains there,' what will my service be worth?

What the poem says

Aṉumaṉ again calls Cītai Aruntati, the model of a faithful wife. He asks what his service would be worth if all he could tell Irāmaṉ was that his queen is still suffering in the demons' prison.

The commentary notes that 'the Beautiful One' renders the name Irāmaṉ in Tamil, and that service which does not show itself in action is useless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruntati! uraitti! aḻakaṟku aruku ceṉṟu 'uṉ
maruntu aṉaiya tēvi neṭu vañcar ciṟai vaippil
perun tuyariṉōṭum oru vīṭu peṟukillāḷ
iruntaṉaḷ 'eṉap pakariṉ eṉ aṭimai eṉ ām?