கம்பராமாயணம் 5406 · சுந்தர 6.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமனே!) (நீ என்னைச் சுமந்து போகும் போது) வெய்யவர் - கொடிய அரக்கர்கள்; வேலையின் இடையே வந்து - கடலுக்கு நடுவே வந்து; கோலி - உன்னை வளைத்துக் கொண்டு; நின்னொடும் - உன்னுடன்; வெம்சரம் கோத்தபோது - கொடிய அம்புகளை வில்லில் தொடுத்துப் போர் புரியும்போது; ஆலம் அன்னவர்க்கு அல்லை - விடம் போன்றவர்களுடன் போர் புரிவதற்கும் ஏற்றவனாகாய்; எற்கு அல்லை - என்னைப் பாதுகாப்பதற்கும் உரியவனாகாய்; சாலவும் - மிகவும்; தடுமாறும் - (எதைச் செய்வது எதைத்தவிர்ப்பது என்று) சஞ்சலம் அடையும்; தனிமையோய் - தனிமை உடையவனாவாய்.
அரக்கருடன் போர் செய்தால் என்னைப் பாதுகாக்க இயலாது. என்னைப் பாதுகாத்தால் அரக்கர்களால் பேரிடர் உண்டாகும். ஆகையால் உன் எண்ணம் முறையன்று என்று பிராட்டி பேசினாள். 'அத்தலைக்கு அல்லேன்... இத்தலைக்கு அல்லேன்' (கம்ப. 82/3) என்று வீடணன் புலம்பியது நினைவுக்கு வரும். கோலி - வளைத்து. அல் - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- If, in the middle of the sea, the cruel ones come
- and surround you, and fit fierce arrows to their bows against you,
- you would be fit neither for those poison-like foes nor for me;
- you would be utterly torn, all alone.
What the poem says
Cītai gives her first practical objection. If the demons caught up with them over the sea and attacked, Aṉumaṉ would have to fight them while carrying her.
He could neither fight properly nor protect her properly, and alone he would be torn between the two.