கம்பராமாயணம் 5407 · சுந்தர 6.14

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்றியும் பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெம் சிலை மாசு உணும்; வேறு இனி
நன்றி என்பவோ? வஞ்சித்த நாய் அவன்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ?

பொருள் · Meaning in Tamil

(உன் செயல் ஏற்றது அன்று என்பதற்கு) அன்றியும் - இது அல்லாமலும், பிறிது ஒன்று உளது - வேறு ஒரு காரணம் இருக்கிறது (உன் செயலால்); ஆரியன் - இராமபிரானின்; வென்றி வெஞ்சிலை - வெற்றிமிக்க கோதண்டம், மாசுணும் - களங்கம் அடையும்; இனி வேறு - (உளது) மேல்வேறு; நன்றி என் - நன்மை என்ன?; பதம் - சோற்றை; வஞ்சித்த - ஏமாற்றி உண்ணும், நாய்களின் - நாய்களைப் போல என்னை வஞ்சித்துக் கவர்ந்த அரக்கரிடத்து; நின்ற வஞ்சனை - நிலைத்த வஞ்சகத்தை, நீயும் நினைத்தியோ - நீயும் கருதுகின்றாயா.

வஞ்சம் என்றது பிறரை ஏமாற்றிச் செய்யும் செயலை. நான், உன் செயலுக்கு உடன்பட்டால் அஃது இராமபிரான் வில்லுக்குக் களங்கம் உண்டாகும். வில்லுக்கே அன்றி உனக்கும் மாசு உண்டாகும். வஞ்சகத்தை வஞ்சகத்தால் வெல்வது உன் போன்ற சான்றோர்கட்கு அழகு அன்று, என்று பேசுகின்றாள். சிலை தனக்கு உரிய செயல் செய்யாமையால் அது மாசு அடையும். அனுமன் தனக்கு உரியதல்லாதவற்றைச் செய்வதால் மாசு அடைவான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And besides, there is another thing: the noble one's
  2. victorious, fierce bow would be stained; what good
  3. would come of it then? The deceit of those curs who steal food,
  4. that settled deceit, are you too thinking of it?

What the poem says

Cītai's second objection is about honour. Irāvaṇaṉ took her by trickery, like a dog that sneaks food. If Aṉumaṉ carries her off in secret, that would be trickery too.

Such a rescue would shame Irāmaṉ's bow, which ought to win her back openly, and it would shame Aṉumaṉ as well. Deceit should not be answered with deceit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟiyum piṟitu uḷḷatu oṉṟu; āriyaṉ
veṉṟi veñ cilai mācuṇum; vēṟu iṉi
naṉṟi eṉ? patam vañcitta nāykaḷiṉ
niṉṟa vañcaṉai nīyum niṉaittiyō?