கம்பராமாயணம் 5411 · சுந்தர 6.18

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அல்லல் - (எலும்புமலையாகப் போகும்) துன்பம்; மாக்கள் - விலங்கு போன்றவர்கள் வாழும்; இலங்கையது ஆகுமோ - இலங்கையளவுடன் நின்று விடுமா; எல்லை நீத்த - (அறத்தின் வரம்பைக் கடந்து போகும்; உலகங்கள் யாவும் - எல்லாவுலகங்களையும்; என் சொல்லினால் - என்னுடைய சொல்லினாலேயே; சுடுவேன் - சுட்டெரித்து விடுவேன்; அது - அவ்வாறு செய்வது; தூயவன் - தூயவனாகிய இராமபிரானின்; வில்லின் ஆற்றற்கு - வில்லினுடைய வலிமைக்கு; மாசு என்று - களங்கம் உண்டாக்கும் என்று (அதை), வீசினேன் - ஒதுக்கித் தள்ளினேன். இ.கோ. பிள்ளை அவர்கள் பெண்ணால் வெற்றி பெறுவது ஆண் பிள்ளைக்குப் புகழன்று என்று கருத்துரை வரைந்தார். சிந்தாமணி (1752) இக் கருத்தைப் பேசும். அல்லல், இலங்கையது ஆகுமோ என்று சேர்க்க. அல்லல் இலங்கைக்கு அடைமொழியாகப் பேசிய உரையே அதிகம். அல்லல் எழுவாயாகக் கொள்ளும் உரை என் தந்தையார் கூறியவுரை. இ.கோ. பிள்ளை அவர்கள், அல்லல் என்பதை மாக்கட்கு அடைமொழி ஆக்கினும், தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அளவில் முடிவு பெறுமோ அல்லவா என்று எழுதினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Would the ruin stop at Ilaṅkai of the brutish ones?
  2. All the worlds that have crossed their bounds I could burn
  3. with my word alone; but that would be a stain on the strength
  4. of the pure one's bow, so I set it aside.

What the poem says

Cītai reveals that, as a chaste wife, she has the power to burn not only Ilaṅkai but all the worlds with a single curse. She has not used it, because a victory won by her would take the glory from Irāmaṉ's bow.

The commentary notes that commentators differ on whether 'ruin' is the subject of the first line or describes Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1allal mākkaḷ ilaṅkaiyatu ākumō?
ellai nītta ulakaṅkaḷ yāvum eṉ
colliṉāl cuṭuvēṉ; atu tūyavaṉ
villiṉ āṟṟaṟku mācu eṉṟu vīciṉēṉ.