கம்பராமாயணம் 5412 · சுந்தர 6.19

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேறும் உண்டு உரை; கேள் அது மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை
ஆறும் ஐந்து பொறி நின்னையும் ஆண் எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ?

பொருள் · Meaning in Tamil

மெய்ம்மையோய் - உண்மையின் வடிவமானவனே; உரை வேறும் உண்டு - (இவை தவிர சொல்லும் சொல் வேறு ஒன்றும் உள்ளது; அது கேள் - அதைக் கேட்பாயாக, ஏறு சேவகன் - வளரும் வீரத்தைப் பெற்ற இராமபிரானின்; மேனி அல்லால் - திருமேனியை அல்லாமல்; இடை - (உன்னுடைய விரதங்களால்) தோற்றுப்போய்; ஆறும் - அவிந்துபோன; ஐம்பொறி நின்னையும் - ஐம் பொறிகளைப் பெற்ற உன்னையும்; (இந்த உலகம்) ஆண் எனக் கூறும் - ஆண் என்று பேசும்; (ஆதலின்) இவ் உரு - இந்த மேனியை, தீண்டுதல் கூடுமோ - தொடுவது தகுமா.

அனுமனே நீ பிரம்மசரிய விரதத்தால் ஐந்து பொறிகளையும் அடக்கியுள்ளாய். அதனால், நீ, ஆண்பால் பெண்பால் என்னும் பகுப்பைக் கடந்தவனாவாய். ஆனால் உலகம் உன்னை ஆண் என்று கூறுகிறது. ஆதலின் உன் மேனியைத் தீண்டுவது தகாது. குறிக்கோளே அன்றி, அதை அடையும் நெறியும் தூய்மையாக இருத்தல் வேண்டும். என்று கூறும் காந்தியடிகளே அம்மையைப் பூரணமாக அறிவர். பிராட்டி, தன் மொழியால் அனுமன் மனம் வருந்துவானோ என்று தயங்கி தயங்கிப் பேசுவதைக் கவிதை நடையிற் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is one more thing to say; listen to it, you who are truth itself!
  2. Except the body of the soaring hero, the world
  3. would call even you, whose five senses are stilled, a male;
  4. is it fitting that I touch this form?

What the poem says

Cītai's last reason is the most delicate. As a lifelong celibate, Aṉumaṉ has mastered his five senses and is beyond male and female. Still, the world will call him a man, and a faithful wife may touch no man's body except her husband's.

The commentary notes how hesitantly she speaks, anxious not to hurt him, and compares her view that the means must be as pure as the end with Gandhi's teaching.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṟum uṇṭu urai; kēḷ atu meymmaiyōy!
ēṟu cēvakaṉ mēṉi allāl iṭai
āṟum aimpoṟi niṉṉaiyum āṇ eṉak
kūṟum; iv urut tīṇṭutal kūṭumō?