கம்பராமாயணம் 5413 · சுந்தர 6.20

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கீழ்மையான் - இழிந்த பண்புடைய இராவணன்; தீண்டினான் எனின் - என்னைத் தொட்டிருப்பானேயானால்; இத்தனை சேண் பகல் - இவ்வளவு நீண்ட நாட்கள்; உயிர் - இராவணனின் உயிரானது; மெய்யின் ஈண்டுமோ - அவன் உடலில் தங்கியிருக்குமா?; (இராவணன்) இமைப்பின் முன் - கண் இமைக்கும் நேரத்தில்; மாண்டு தீர்வென் என்றே - அழிந்து ஒழிவேன் என்று கருதியே; வன்மையால் - பேராற்றலால், நிலம் - யான் இருந்த பூமியை; கீண்டு கொண்டு - பெயர்த்து எடுத்துக் கொண்டு; ஏகினன் - இலங்கைக்குச் சென்றான்.

இராவணன் என்னைத் தொட்டிருந்தால் என் உடம்பில் உயிர் இருக்குமா; நான் இறந்து படுவேன் என்று கருதித்தான் என்னை நிலத்துடன் பெயர்த்து வந்தான் என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. இராவணன் தனக்கு அழிவு வாராதிருத்தலையே எண்ணினான் என்பதை அடுத்தபாடல் உறுதி செய்கிறது. அனுமன், என் தோளில் ஆரோகணித்தலை வெறுத்தாய். ஆனால் இராவணன் உன்னை எப்படிக் கொணர்ந்தான் என்று கேட்டால் என்ன செய்வதென்று கருதி இங்ஙனம் பேசினாள் என்று கூறும் மரபு உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Had he touched me, would life have stayed so many long days
  2. in his body? Thinking, 'Within the blink of an eye
  3. I would perish and be done,' with his strong hands he dug up the ground
  4. and carried it off, that base one, and went.

What the poem says

Cītai explains how Irāvaṇaṉ carried her to Ilaṅkai without ever touching her. Had he touched her, he would have died at once.

Knowing this, he lifted out the patch of earth she stood on and took it away whole. The next verse names the curse behind this. One traditional reading also takes the verse as Cītai's answer to a question Aṉumaṉ might ask: if you will not ride on me, how did Irāvaṇaṉ bring you here?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīṇṭiṉāṉ eṉiṉ ittaṉai cēṇ pakal
īṇṭumō uyir meyyiṉ? imaippiṉ muṉ
māṇṭu tīrvaṉ eṉṟē nilam vaṉ kaiyāl
kīṇṭu koṇṭu eḻuntu ēkiṉaṉ kīḻmaiyāṉ.