கம்பராமாயணம் 5425 · சுந்தர 6.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திங்கள் ஒன்றில் - ஒருமாத கால எல்லையில், என் - என்னுடைய; செய்தவம் - செம்மையான தவம்; தீர்ந்ததால் - நிறைவேறுகிற படியால்; (அதற்குள்) (இராமபிரான்) இங்கு வந்திலனே எனில் - இங்கு வாராமற் போவானேயானால்; யாணர் நீர் - அழகிய நீர்ப் பெருக்கை உடைய; கங்கையாற்றங்கரை - கங்கை நதியின் கரையில்; அடியேற்கும் - அடியேனுக்கும்; தன் - தன்னுடைய; செங்கையால் - சிவந்த கரங்களால்; கடன் செய்க என்று - இறுதிச் சடங்கைச் செய்க என்று; செப்புவாய் - சொல்வாயாக.
ஒரு மாத எல்லையில் தவம் நிறைவு பெறுகிறது. அதற்குள் வந்தால் என்னைப் பார்க்கலாம். இல்லையேல் இறந்து படுவேன். அச்சடங்கு செய்ய இங்கு வரவேண்டா. அதை அங்கே அருகில் உள்ள கங்கைக் கரையில் செய்க என்று கூறுக என்று கூறுவதால் பிராட்டியின் மனநிலை புலப்படுகிறது. செய்தவம் - செம்மையான தவம். 'செய்திருவினை உற' (கம்ப. 2624) செய்யும் தவம் என்று கூறினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Since within one month the penance I keep comes to its end,
- if he has not come here, then on the bank of the Ganges
- with its rich waters, for me his servant too,
- let him perform the rites with his own red hands,' so tell him!
What the poem says
Cītai continues her message to Irāmaṉ. Her vow ends with the month. If he has not come by then, she will be dead, and he need not come to Ilaṅkai at all.
He can perform her funeral rites on the bank of the Ganges, near home. The commentary notes how her bitter words show her state of mind.