கம்பராமாயணம் 5429 · சுந்தர 6.36

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரசு வீற்றிருந்து - (இராமபிரானுடன் சிம்மாசனத்தில் ஒக்க இருந்து; ஆளவும் - ஆட்சி புரியவும்; ஆய்மணி - அசையும் மணியையும்; புரசை - கழுத்திடு கயிற்றையும் (பெற்ற); யானையின் - யானையின் மேலே; வீதியில் போகவும் - வீதியில் உலாச் செல்லவும்; விரசு கோலங்கள் - (பெருமானின் பொருந்திய பிற அலங்காரங்களை; காணவும் - பார்ப்பதற்கும்; விதியிலேன் - பாக்கியமில்லாத யான்; உரை செய்து என்னை - (பலபடியாக) பேசுவதால் என்ன பயன்; என் ஊழ்வினை உன்னுவேன் - என்னுடைய பழவினையை நினைந்து துன்பம் அடைவேன்.

ஆய்தல் - அசைதல். ஆய்மதி (திருச்சிற் - 125 உரை - அடை - பதி) புரசை - யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு. ஆளவும், போகவும், காணவும் விதியிலேன் என்று கூட்டுக. காணவும் என்பது காண என வந்துள்ளது. உம்மைத் தொகை ஆளவும் போகவும் விதியிலேன் என்று பொருள் கூறப்பெற்றது. ஏற்பின் ஏற்க. விதி - பாக்கியம். 'விதியில் சாக்கியர்' என்னும் பகுதிக்குப் பாக்கியமில்லாத பெளத்தர் என்று விளக்கம் கூறப் பெற்றது. அரசு என்றது அரசு கட்டிலை. 'அரசு வீற்றிருக்க வீட்டீர்' (கம்ப. 4326) பழந்தமிழ் மன்னர் அரசியுடன் வீற்றிருத்தலை மெய்க்கீர்த்திகள் கூறும். 'வீரசிம்மாசனத்து திரிபுவனமுடையாளொடும் வீற்றிருந்தருளிய' (முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To sit enthroned and rule with him, to ride
  2. on an elephant with swaying bell and neck-rope through the streets,
  3. to see the splendid adornments, I have no such fortune:
  4. what use is talk? I will brood on my fate from past deeds!

What the poem says

Cītai mourns the life she had expected. She was to sit beside Irāmaṉ on the throne, ride with him in procession on a royal elephant, and see him in all his splendour.

She feels that fortune is not hers, and that all she can do is reflect on the karma of her past lives. The commentary notes that old Tamil royal inscriptions describe kings seated on the throne with their queens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aracu vīṟṟiruntu āḷavum āy maṇip
puracai yāṉaiyiṉ vītiyil pōtavum
viracu kōlaṅkaḷ kāṇa viti ilēṉ:
urai ceytu eṉṉai? eṉ ūḻviṉai uṉṉuvēṉ!