கம்பராமாயணம் 5431 · சுந்தர 6.38

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அனுமனே நீ) எந்தை, யாய், முதலிய - என்னுடைய தந்தை தாய் முதலான; கிளைஞர் யார்க்கும் - எல்லாச் சுற்றத்தார்க்கும்; என் - என்னுடைய; வந்தனை விளம்புதி - வணக்கத்தைக் கூறுக (பிறகு); கவியின் வேந்தனை - குரங்குகளின் தலைவனான சுக்கிரீவன்பால்; சுந்தரத் தோளனை - அழகிய தோள்களைப் பெற்ற இராமபிரானை; தொடர்ந்து - பின்பற்றிச் சென்று; அந்தம் இல் - முடிவில்லாத; திருநகர்க்கு - அழகிய அயோத்திக்கு; அரசன் ஆக்கு - மன்னவனாகச் செய்வாயாக; என்பாய் - என்று கூறுவாயாக. சுந்தரத் தோளன் - திருமால். இங்கு இராமன் மேல் சாற்றிப் பேசப் பெற்றது, திருமாலே இராமனாதலால் - மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் என்பது கோதையின் காதல் மொழி (நாச 5.9.1) கவியின் மன்னனை என்பதில் உள்ள இரண்டனுருபை ஏழன் உருபாக மாற்றுக, மன்னன்பால் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To my father, my mother and all my kin, my
  2. greetings, tell them! And to the king of the monkeys say:
  3. 'Follow the one with the beautiful shoulders, guard him, go,
  4. and make him king of the endless, glorious city!'

What the poem says

Cītai sends her last messages. Aṉumaṉ is to give her greetings to her father, her mother and her family. He is also to ask Cukkirīvaṉ, king of the monkeys, to stay at Irāmaṉ's side, protect him and see him crowned in Ayōttī.

'The one with beautiful shoulders' is an epithet of Viṣṇu, used here for Irāmaṉ. The commentary traces it to Āṇṭāḷ's love poems.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1entai yāy mutaliya kiḷaiñar yārkkum eṉ
vantaṉai viḷamputi! kaviyiṉ maṉṉaṉai
'cuntarat tōḷaṉait toṭarntu kāttup pōy
antam il tiru nakarkku aracaṉ ākku! 'eṉpāy!