கம்பராமாயணம் 5432 · சுந்தர 6.39

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இத்திறம் அனையவள் இயம்ப 'இன்னமும்
தத்துறவு ஒழிந்திலை தையல் நீ! 'எனா
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை
ஒத்தன தெரிவுற உணர்த்தினான் அரோ.

பொருள் · Meaning in Tamil

அனையவள் - அங்ஙனம் நொந்த பிராட்டி; இத்திறம் - இப்படி (கலங்கி); இயம்ப - பலபடியாகப் பேச; (அனுமன்) பிராட்டியை நோக்கி) தையல் - அம்மையே; நீ - நீ; இன்னமும் - இன்னும்கூட; தத்துறல் ஒழித்திலை - கலங்குதலை விட்டாயில்லை; எனா - என்று முன்னுரை பேசி, எத்திறத்தும் - காரணங்களும் (காரியங்களும்); இயைந்த - அமைந்துள்ளனவும்; ஒத்தன - அறிவு ஒவ்வக் கூடியனவும் ஆன; இன்உரை - இனிய மொழியை; தெரிவுற - மனம் தெளிவு அடையும்படி; உணர்த்தினான் - உணரும்படி கூறினான்;

இன்உரை உணர்த்தினான். எத்திறத்து ஏதுவும் இயைந்த, ஒத்தன, இன்உரை, என்று கூட்டுக. எத்திறத்தும் என்பது எத்திறத்து என்று வந்துள்ளது. உம்மைத் தொகை - அரோ - அசை. இவ்விருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம் என்னும் சீர்களைப் பெற்றுவரும். இந்நூலில் 2177 முறை இவ்விருத்தம் காட்சிதருகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As she spoke in this way, 'Even now
  2. you have not stopped your distress, lady!' he said,
  3. and with sweet words, fitting in every respect and backed by reasons,
  4. he made her understand clearly.

What the poem says

Cītai's farewell messages assume that she will die. Aṉumaṉ gently scolds her for still despairing, and he sets out to reassure her with sweet words that are also well reasoned.

The metre changes again here. The commentary notes that this four-foot form is the most frequent metre in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1it tiṟam aṉaiyavaḷ iyampa 'iṉṉamum
tattuṟal oḻintilai taiyal nī! 'eṉā
ettiṟattu ētuvum iyainta iṉ urai
ottaṉa terivuṟa uṇarttiṉāṉ arō.