கம்பராமாயணம் 5439 · சுந்தர 6.46

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(யாங்கள்) கற்புடையாள் - கற்புடையவளும்; பொய்யாள் - பொய்யில்லாதவளும் ஆகிய பிராட்டி; தீண்டா - நெருங்கத்தகாத; வஞ்சகர் - வஞ்சக வடிவான அரக்கர்கள்; தீண்டாமுன் - தொடுவதற்கு முன்பு; மாண்டாள் - இறந்துபட்டாள் (அதனால்); பூண்டாள் - புகழை அணிந்து கொண்டாள்; என்று - என்று கருதி, மீண்டால் - திரும்பிச் சென்றால், வீரம் - எங்களுடைய வீரமானது; விளங்காதோ - விளக்கம் அடையாதா.

சீதை இறந்துபட்டாள். இனிப் பகைவருடன் போராடுவதால் பயனில்லை என்று திரும்பினால் எங்கள் வீரம் விளக்கம் அடையாதா என்று அனுமன் கூறுவது அசதியாடலின் உச்சம். கொல்லாது திரும்பின் அகிம்சா வீரர்கள் என்று இராமன் முதலானவர்களை உலகம் கொண்டாடும் என்று கூறுவதன் மூலம் எது அகிம்சை எது அகிம்சையல்ல என்பது விளக்கப்படுகிறது. பூண்டாள் - புகழை ஆபரணமாக அணிந்தாள்; மாண்டாள், அதனால் புகழ் பூண்டாள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The chaste one, the truthful one, wore her fame:
  2. before the untouchable deceivers could touch her,
  3. she died!' So consoling our hearts,
  4. if we turned back, would our valour not shine?

What the poem says

Aṉumaṉ's irony reaches its height. Shall the monkeys tell themselves that Cītai died with her virtue intact before the demons could touch her, call it a glorious end, and walk home? That would be a fine show of valour!

The commentary adds that the verse shows the difference between true non-violence and cowardice dressed up as non-violence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pūṇṭāḷ kaṟpuṭaiyāḷ poyyāḷ
tīṇṭā vañcakar tīṇṭāmuṉ
māṇṭāḷ! 'eṉṟu maṉam tēṟi
mīṇṭāl vīram viḷaṅkātō?