கம்பராமாயணம் 544 · பால 9.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அப்பொழுது) செய்ய தூயவன் - (நடுநிலை வழிச் செல்லக் கூடிய) மனத் தூய்மையுடைய அம் முனிவன்; விழி தீ சிந்த நோக்கி - கண்கள் தீப்பொறியைக் கக்குமாறு கோபித்துப் பார்த்து; செய்ததை உணர்ந்து - (இருவரும்) செய்த தீச்செயலை அறிந்து; நின்கைச் சுடு சரம் அனைய சொல்லால் - உனது கையால் ஏவப்படும் கொடிய அம்பு போன்ற சுடு சொல்லால்; அவனை - அந்த இந்திரனை: ஆயிரம் மாதர்க்கு உள்ள - பெண்களுக்கு உள்ள ஆயிரம்; அறிகுறி உனக்கு - குறிகள் உனக்கு; உண்டாக என்று - உண்டாகட்டும் என்று; ஏயினன் - சாப வார்த்தையை ஏவினான்; அவை எலாம் - (அவ்வாறே) அப்பெண்குறிகள் ஆயிரமும்; இமைப்பின் முன்னம் - இமைப் பொழுதிலே; இயைந்தன - அவன் உடம்பில் வந்து பொருந்தின.
செய்ய தூயவன்: தன்னோடு எவ்வித உறவும் இல்லாத இந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். அத்தோடு அமையாமல் தன் மனைவிக்கும் ஒரு சார் அன்பு காட்டாமல் சாபம் கொடுத்தான். ஆதலின் கெளதமன் தூயவன் ஆனான். இந்திரனுக்கு அமைந்த சாபம்: ஒரு பெண்ணின் குறியிடத்து இந்திரன் மிகவிருப்பம் கொண்டு இழிந்த செயல் புரிந்தமையால் அதனிடம் வெறுப்பு உண்டாகும் பொருட்டு அவனுடம்பு முழுவதும் பெண்குறிகள் அமையுமாறு சாபம் அளிக்கப் பெற்றது. சுடு சரம் அனைய சொல்: இராமனது அம்பு பகைவரைக் கொல்லுதலாகிய தன் பயனை விரைந்து தருதல்போல முனிவர் சொல் கொடியவரை அழித்தலாகிய தன் பயனைத் தவறாமல் விரைந்து தரும் என்பது குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at him with eyes that shed fire, knowing what had been done, the upright,
- pure sage, with a word like the burning arrow from your own hand,
- said, 'May there come upon you the marks that a thousand women bear!'
- so he cursed him; and all of them came upon him before an eye could blink.
What the poem says
Kautamaṉ sees at once what has happened and curses Indra. Since Indra lusted after a woman's body, his own body is to be covered with a thousand female organs, so that he will come to loathe what he craved. The curse takes effect instantly. Telling the story to Irāmaṉ, Vicuvāmittiraṉ compares the sage's word to Irāmaṉ's own arrows, which never fail to strike.
The commentary calls Kautamaṉ "upright and pure" because he judges impartially. He punishes the stranger Indra, and he does not spare his own wife either.