கம்பராமாயணம் 545 · பால 9.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரந்தரன் எல்லை இல் - (தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால்) இந்திரன் அளவில்லாத; நாணம் எய்தி - நாணத்தை அடைந்து; யாவர்க்கும் - (தனது நிலையைப் பார்த்தவர்கள், கேட்டவர்கள்) எல்லோர்க்கும்; நகை வந்து எய்த - பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி; புல்லிய பழியினோடும் - தனக்கு நேர்ந்த பழியோடும்; போயபின்றை - வானுலகத்திற்குச் சென்ற பின்பு; மெல்லியலாளை நோக்கி - (அம் முனிவன்) மெல்லியலாளான தன் மனைவியைப் பார்த்து; விலைமகள் அனைய நீயும்- (தீய ஒழுக்கத்தால்) வேசியைப் போன்ற நீயும்; கல் இயல் - கல் வடிவம்; ஆதி என்றான் - ஆகுக என்று சபித்தான்; கருங்கல்ஆம் - (உடனே) அவள் கருங்கல் வடிவாய்; மருங்கு வீழ்வாள் - பக்கத்திலே வீழ்வாள் ஆயினாள்.
விலைமகள் அனையவள்: உண்மையில் அகலிகை நெஞ்சறியக் கற்பிழந்தவள் ஆகாள். இருந்தும் கெளதமன் சினத்தால் உண்மையை ஆராய்ந்து பாராமல் 'விலைமகள் போன்றவள்' அகலிகை என்று கூறுகிறான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Covered in boundless shame, so that laughter came to all who saw,
- after Purantaraṉ had gone away with his base disgrace,
- the sage looked at the gentle lady: 'You too, who are like a woman who sells herself,
- become a thing of stone,' he said; and she, turning to black stone, fell at his side.
What the poem says
Indra slinks back to heaven, laughed at by everyone. Then Kautamaṉ turns to his wife. He calls her no better than a harlot and curses her to become stone, and she falls beside him as a black rock. The commentary notes that Akalikai had not knowingly set out to be unfaithful. Kautamaṉ, in his anger, did not stop to weigh the facts before speaking so harshly.