கம்பராமாயணம் 546 · பால 9.80

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர்,
'அழல் தரும் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக' என்னத்,
'தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரத ராமன் என்பான்
கழல் துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி' என்றான்.

பொருள் · Meaning in Tamil

(அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி) அழல் தரும் - (தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும்) நெருப்பைச் சிதறும்; கடவுள் அன்னாய் - உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே!; பிழைத்தது பொறுத்தல் - சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது; என்றும் பெரியவர் கடனே - எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும்; என்பர் - என்று கூறுவர் (முன்னோர்), இதற்கு முடிவு - (ஆதலால்) இச் சாபத்திற்கு ஒரு முடிவை; அருளுக என்ன - அருள்வீராக என்று வேண்டி நிற்க; தழைத்து வண்டு - (அதற்கு இரங்கிய அம் முனிவன் செழிப்புடையதாய் வண்டுகள்; இமிரும் தண்தார் - ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த; தசரத ராமன் என்பான் - தசரத ராமன் என்பவனது; கழல் துகள் கதுவ - திருவடித் தூள் உன்மேல் படியும் போது; இந்தக் கல் உரு - இந்தக் கருங்கல் வடிவம்; தவிர்தி என்றான் - நீங்குவாய் என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

சிறியர் பெரியர்: சிறியவர் செய்த பிழை பெருங்கேடு தருவதாக இருப்பினும் பெரியவர் அதனைப் பொறுக்க வேண்டும்; அதுவே அவர்களது உயர்வான கடமையாகும். அழல் தரும் கடவுள்: நெருப்புப் போன்ற செந்நிறம் பொருந்திய சிவன்: அக்கினி தேவனைப் போன்ற தூய்மையுடையவன் - என்று சொல்லலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To bear with a wrong is ever the duty of the great; in your love,
  2. O you who are like the god who sends forth fire, grant an end to this,' she said;
  3. 'When the dust from the feet of the one called Tacarata-Irāmaṉ, of the cool garland where bees hum in plenty,
  4. touches you, you shall be rid of this stone form,' he said.

What the poem says

As she turns to stone, Akalikai pleads with her husband. She reminds him that the great should forgive the faults of lesser people, and asks for a limit to the curse. Kautamaṉ, here compared to fiery Śiva, relents and names the remedy. When the dust from the feet of Irāmaṉ, son of Tacarataṉ, falls on her, she will be freed. That is what has just happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piḻaittatu poṟuttal eṉṟum periyavar kaṭaṉē aṉpāl,
'aḻal taruṅ kaṭavuḷ aṉṉāy! muṭivu itaṟku aruḷuka' eṉṉat,
'taḻaittu vaṇṭu imirum taṇ tārt tacaratarāmaṉ eṉpāṉ
kaḻaltukaḷ katuva, intak kal urut tavirti' eṉṟāṉ.