கம்பராமாயணம் 5442 · சுந்தர 6.49

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூளா - காரணம் இல்லாமல் கிளர்ந்து எழாத; வெம்சினம் - (இராமபிரானின்) கொடுங்கோபம்; கோள் ஆனார் உயிர் - கோள் போலும் அரக்கர்களின் உயிரை; கோளோடும் - பறித்தெடுப்பதுடனே; முற்று ஆகா - நிறைவு பெறாது; மீளாவேல் - அவர் சீற்றம் திரும்பி இராமபிரான் பால் ஒடுங்காவிடின்; புவி - மண்ணுலகம், வானோரும் - விண்ணுலகுடன்; மாளாதோ - அழியாதோ; அயல் - பக்கத்தில்; வேறு உண்டோ - வேறு பொருள் அழியாமல் இருக்குமா?

கொள்ளுதல் - பற்றுதல் (பறித்தல்) கொள், கோள் ஆயிற்று, கோளானோர் - என்பதற்குக் கொலை செய்பவர் என்றும் தீயோர் என்றும் பொருள் கூறலாம். கோள் எங்ஙனம் உலகத் தீமையை விளைவிக்குமோ அதுபோல் அரக்கர்கள் தீமையை விளைவிப்பார்கள். கோள் என்றது தூமகேது முதலியவற்றை. தீக்கோள் எனினும் அமையும். 'கோள் ஆகி வந்தவா கொற்ற முடி' (கம்ப. 1707) என்று முன்பு பேசப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the taking of the lives of those who are like evil planets,
  2. his fierce anger, which never flares without cause, will not be done;
  3. if it does not turn back, would anything else nearby remain?
  4. Would earth not perish together with heaven?

What the poem says

Aṉumaṉ says Irāmaṉ's anger never flares without reason, but once roused, killing the demons will not be enough to satisfy it.

The demons are compared to baleful planets or comets, which bring disaster on the world. Unless his anger is drawn back, earth and heaven together may perish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōḷ āṉār uyir kōḷōṭum
mūḷā veñ ciṉam muṟṟu āka
mīḷāvēl ayal vēṟu uṇṭō?
māḷātō puvi vāṉōṭum?