கம்பராமாயணம் 5443 · சுந்தர 6.50

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாழித் தண் கடல் தம்மோடும்
ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம் அன்று
ஆழிக் கையவன் அம்பு அம்மா!
ஊழி தீ என உண்ணாதோ?

பொருள் · Meaning in Tamil

அம்மா! - தாயே (இராமன்); அன்று - உன் செய்தி கேட்கும் அன்று; ஆழிக்கை அவன் அம்பு - சக்கரம் ஏந்திய இராமபிரானின் அம்புகள்; தாழி - தாழி போன்ற; தண் - குளிர்ந்த; கடல் தம்மோடும் - கடல்கள் ஏழுடனே, ஏழுக்கு - கீழே உள்ள ஏழ் உலகுக்குச் சரியாக; ஏழ் - மேலே உள்ள ஏழான; உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்; ஊழித் தீ என - ஊழிக் காலத்தில் தோன்றும் காலாக்கினிபோல்; உண்ணாவோ - உண்டு முடிக்காதோ.

தாழி - பானை. 'தாழி தரையாகத் தண்தயிர் நீராக' என முன்பு பேசப் பெற்றது. (கம்ப. 2015) தாழி என்பதற்கு ஆழ்ந்த என்னும் பொருள் கூறுவதும், தாழ் இத்தண்கடல் என்னும் பொருள் கூறுவதும் மிகை. பானை தீண்டப்படாப் பொருளோ அறியேன். நிலத்தை நாலுக்கு நாலு, எட்டுக்கு மூன்று என்பர். அங்கு உபயோகப்படுத்தப்படும் நான்கன் உருபைக் கருதுக. நான்கன் உருபை மூன்றன் உருபாக்கி ஏழொடு ஏழ் என்று கூறுவாரும் உளர். 'முடிவினில் தீக்கும் எரியின் மும்மடி கொடியன சுடுசரம் எய்தான்' (கம்ப. 6606) என்று பின்பு பேசப்படும். இங்கு கூறப்பெற்ற உரை திரிசிரபுரம் மகாவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை அவர்கள் கருத்துத் தோன்ற எழுதிய உரை. ஆழி - சக்கரமே. கவிச்சக்கரவர்த்தி இராமபிரானைத் திருமால் என்றே பேசுவார் ஆதலின் இங்கு வேற்றுரை பேசுவது ஒளசித்திய விரோதம். அம்மா... ஆச்சரியப் பொருளில் வழங்குவதாகவும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Together with the cool seas, deep as great jars,
  2. the seven worlds matching the seven, all of them, on that day,
  3. the arrows of him who holds the discus, mother!
  4. would they not devour them like the fire at the end of time?

What the poem says

Aṉumaṉ pictures Irāmaṉ's fury on the day he hears what has happened to Cītai. His arrows would consume the seven seas and all fourteen worlds, the seven above and the seven below, like the fire that ends each cosmic age.

The commentary notes that the discus marks Irāmaṉ as Viṣṇu, and that the seas are compared to great jars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḻit taṇ kaṭal tammōṭum
ēḻukku ēḻ ulaku ellām aṉṟu
āḻik kaiyavaṉ ampu ammā!
ūḻit tī eṉa uṇṇāvō?