கம்பராமாயணம் 5446 · சுந்தர 6.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புளிக்கும் - (யாவரும்) வெறுப்படைகின்ற, கண்டகர் - முள்போலும் அரக்கர்களின்; புண்ணீருள் - இரத்த வெள்ளத்தில்; குளிக்கும் பேய் - நீராடும் பேய்கள் (அதனுள்); குடையும் தோறும் - முழுகும் போதெல்லாம்; ஒளிக்கும் தேவர் - (இக்காட்சியை) மறைவாயுள்ள தேவர்கள்; உள்ளம் உவந்து - மனம் மகிழ்ந்து; களிக்கும் - செருக்கடைகின்ற; நல்வினை - நற்செயலை; காணாயோ - தோற்றுவிக்கமாட்டாயா.
புளிக்கும் - வெறுப்பைத் தரும். ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் (குறுந் - 354) அடை - பதிப்பு. காண்டல் - உண்டாக்குதல். முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். (தொல் - பொருள். 649) அடை - பதிப்பு. குடைதல் - நீரில் மூழ்குதல். 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே'... என்று திருப்பாவை பேசும். குளித்தல் - நீராடுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the ghouls that bathe in the blood-flood of the hateful, thorn-like demons
- plunge in again and again,
- the gods, who are hiding now, will rejoice in heart
- and exult; will you not bring about this good deed?
What the poem says
Aṉumaṉ begins a run of verses picturing the coming war. Ghouls will bathe in rivers of demon blood, and the gods, who now hide in fear of Irāvaṇaṉ, will look on with delight.
He asks Cītai whether she will not live to bring this about. 'Thorn-like' describes the demons as thorns in the world's side.