கம்பராமாயணம் 5447 · சுந்தர 6.54

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழியின் இறுதியின் - யுகங்களின் முடிவுக்காலத்திலே; உரும் எறிந்தென - இடிகள் தாக்கினாற் போல; கேழ்கிளர் - ஒளி விளங்கும்; சுடுகணை - வருத்துகின்ற அம்புகளால்; கிழித்த - கிழிக்கப் பெற்ற (அரக்கர்களின் உடலில் உள்ள); புண்பொழி - புண்கள் சொரிகின்ற, தாழ் இரும் - மேலே இருந்து கீழே விழும் பெரிய; குருதியால் - இரத்த அருவிகளால்; தரங்க வேலைகள் ஏழும் - அலைகளுடன் கூடிய ஏழு கடல்களும்; நின்று இரைப்ப - இடைவிடாமல் ஒலிப்பதைக்; காண்டி - காண்பாயாக.

யுகாந்தகாலத்தில் இடிகள் மலைகளில் தாக்கும். அதுபோல இராமபிரானின் அம்பு மலைபோன்ற அரக்கர்களைத் தாக்கும். அவருடம்பு குருதி சொரியும். தாழ்தல் - மேலிருந்து விழுதல். பொங்கு அருவிதாழும் புனல் வரை (நாலடி - 231) தாழ் என்பதற்கு ஆழம் என்று உரை கூறப் பெற்றது. சொற் பொருத்தம் நன்று. மற்றவை ஆய்க. இவ் விருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம் என்னும் சீர்களை முறையே பெற்று வரும். இத்தகு பாடல்கள் இந்நூலில் 2177 உள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if thunderbolts struck at the end of the ages,
  2. from the wounds torn by the bright, burning arrows
  3. the dark blood will pour down, so that the wave-tossed seas,
  4. all seven, become one and roar; you will see it!

What the poem says

Aṉumaṉ goes on with his vision of the battle. Irāmaṉ's arrows will strike the mountain-like demons like thunderbolts at the end of an age.

So much blood will pour from their wounds that the seven seas will merge into one roaring flood. The metre changes again here.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻiyiṉ iṟutiyiṉ urum eṟinteṉa
kēḻ kiḷar cuṭukaṇai kiḻitta puṇ poḻi
tāḻ iruṅ kurutiyāl taraṅka vēlaikaḷ
ēḻum oṉṟāki niṉṟu iraippak kāṇṭiyāl!