கம்பராமாயணம் 5448 · சுந்தர 6.55

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அம்மையே) சோர்வுறும் - சிந்துகின்ற, ஆலி கண்ணியர் - நீர்த்துளிகளுடன் கூடிய கண்களை உடைய அரக்கிமார்கள்; சூல் - கருக் கொண்டாற் போன்ற; இரும் பெருவயிறு அலைத்து - மிகப் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு; அறுத்து நீத்தன - அறுத்து ஒதுக்கியனவும்; வாலியும் கடப்ப அரு - வாலியாலும் தாண்ட முடியாத; வனப்ப - தோற்றத்தை உடையனவும் (ஆகிய); வான் உயர் - வானம் அளாவிய; தாலி பெரு மலை - தாலியாகிய மலை; தயங்கக் காண்டி - விளங்குவதைப் பார்ப்பாயாக.

சூல் - கரு. இயல்பாக உள்ள பெருவயிறு சூல் கொண்டாற்போல் இருக்கும். ஆலி - நீர்த்துளி. அறுத்து நீத்தனவும், வாலியாலும் கடக்கவியலாத தோற்றத்தை உடையனவும் ஆகிய தாலிமலை. சூல் - முட்டை போன்று உருண்டு பருத்திருக்கும் வயிறு. மழைச் சூல் உடும்பு (பெரும்பாண் 132) ஆலியம் கண்ணினர், தாலியம் பெருமலை என்பனவற்றில் உள்ள 'அம்' சாரியை. காண்டியால் - இதில் உள்ள ஆல் அசை. இதனால் அரக்கர்கள் அழிவர் உறுதி. உனக்கும், உலகுக்கும் நல்ல காலம் வரும் என்பது குறிக்கப்பெறுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Beating their huge bellies, round as if with child, the demon women
  2. with tear-filled eyes will cut off and cast away their marriage threads,
  3. so many that even Vālī could not leap across them, rising sky-high,
  4. a great mountain of wedding threads gleaming; you will see it!

What the poem says

Aṉumaṉ pictures the widows of Ilaṅkai. Weeping and beating their pot-bellies, they will cut off their marriage threads, the tāli, which a wife removes when her husband dies.

The heap of discarded threads will be a mountain reaching the sky, so vast that even Vālī, the great leaper, could not jump over it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūl irum peru vayiṟu alaittuc cōrvuṟum
āli am kaṇṇiyar aṟuttu nīttaṉa
vāliyum kaṭappu aru vaṉappa vāṉ uyar
tāli am peru malai tayaṅkak kāṇṭiyāl!