கம்பராமாயணம் 5450 · சுந்தர 6.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரம் பயில் - கைகளால் முழக்கப்படும்; முரசு இனம் கறங்க - முரசும் அதன் இனமான வாத்தியங்களும் ஒலிக்க; கை தொடர் - கைகளால் இயக்கப்பெறும்; நரம்பு இயல் - (வீணை யாழ் முதலானவற்றில் உள்ள) நரம்புகள் இயன்ற; இமிழ் இசை நவில - ஒலிக்கும் இசையை ஒலிக்கவும்; அரம்பையர் - தேவ மகளிர்: நாடகம் ஆடிய அரங்கில் - நடனம் ஆடிய மேடைகளில்; ஆண் தொழில் குரங்குகள் - ஆண்மைத் தொழில் புரிந்த குரங்குகள்; முறைமுறை - வரிசை வரிசையாக, குனிப்ப - கூத்தாடுதலை; காண்டி - காண்பாயாக.
நவிலுதல் - ஒலித்தல். இளம் நவில் அன்னம் (பம்பை வாவி 8) குனித்தல் என்னும் தொழிற் பெயர் குனிப்ப என்று பெயரெச்ச வடிவில் உள்ளது. குனிப்ப என்பதற்குக் குனித்தலைச் செய்ய என்பதே பொருள். 'இருமறு மார்ப நீ அருள வேண்டும்' என்று பரிபாடல் பேசும் (பரிபாடல் 1-36) அருள வேண்டும் அதிகை வீரட்டனீரே என்று அப்பர் பேசுவார் (தேவா 20-4) அருளல் வேண்டும் என்பது அருள என உருக்கொண்டது. இதுவரை, அரக்கர்கள் மகிழ அரம்பையர் நாடகம் ஆடினர். இனி அரக்கர்கள் வருந்தக் குரங்குகள் நாடகம் ஆடும். என்றதனால் அரக்கர்களின் அழிவு உறுதி செய்யப்பெறுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the drums beaten by hand and their kin resound, and the ringing music
- of strings played by the fingers sounds forth, on the stages where
- the heavenly dancers once performed their dances, the manly
- monkeys, row upon row, will dance; you will see it!
What the poem says
Aṉumaṉ pictures the monkeys' victory celebration. Heavenly nymphs once danced for the demons' pleasure on the stages of Ilaṅkai.
Now, to drums and stringed music, the monkey warriors will dance there in rows. Their dance will mark the demons' grief and the certainty of their fall.