கம்பராமாயணம் 5461 · சுந்தர 6.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இராமபிரானுக்கு) சோகம் வந்து உறுவது - உள்ளம் சோர்வு அடைவது; தெளிவு தோய்ந்து அன்றோ - அது தெளிவை அடைந்தால் அல்லவா; மேகம் - மேகமானது; வந்து - அணுக; இடித்து - இடியிடித்து; உரும் ஏறு - பேரிடியை; வீழ்க்கினும் - வீழச் செய்தாலும்; அகமும் புயங்களும் - உடம்பும் தோள்களும்; அழுந்த - வாட்டம் அடைய; ஐந்தலை நாகம் - ஐந்து தலையைப் பெற்ற நாகம்; வந்து - அணுகி, அடர்ப்பினும் - தாக்கினாலும்; உணர்வு நாறுமோ - (பெருமானுக்கு) உணர்ச்சி உண்டாகுமா.
பெருமான், தன்நினைவற்றுக் கிடப்பதால் சோகம் வருத்தாது என்க. இடிக்கும் நஞ்சுக்கும் எட்டாத நிலையில் பெருமான் உள்ளான். பெருமான் ஒரு நாளாகிலும் தெளிந்திருந்தால் அல்லவா சோகத்தை அறியப் போகிறான் என்பது பழைய உரை (அடை - பதி) மேகம் வந்து உரும் ஏறு வீழினும் என்னும் பாடத்திற்கு மேகத்திலிருந்து வெளிப்பட்டு இடி வீழ்ந்தாலும் என்று பொருள் கொள்ள வேண்டும். உரும் ஏறு எழுவாய். வீழ்க்கினும் என்னும் பாடத்திற்கு மேகம் எழுவாய். நாறுதல் - தோன்றுதல். அறங்கள் நாறும் மேனியார் (வாலிவதை. 3)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is it not only when the mind is clear that grief comes and takes hold?
- Even if clouds came and thundered and a great thunderbolt fell,
- even if a five-headed serpent came and pressed on him
- so that his chest and shoulders were crushed, would any feeling stir?
What the poem says
Aṉumaṉ says Irāmaṉ is so lost in longing for Cītai that he is beyond even feeling grief, for grief needs a clear mind to feel it.
A thunderbolt or the bite of a five-headed cobra would not make him notice. He has gone past ordinary sensation.