கம்பராமாயணம் 5463 · சுந்தர 6.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அம்மையே) மெய்ந்நிலை - (என்னுடைய சொல்லின்) உண்மைத் தன்மையை; உணர்ந்துழி (உம்) - உணர்ந்த இடத்தும்; இந்நிலை உடையவன் - இந்த நிலைமையில் இருக்கும் இராமபிரான்; தரிக்கும் என்றியேல் - பொறுத்திருப்பான் என்பாயானால்; விடை தந்து - (அடியேனுக்கு) விடை கொடுத்து; ஈதியேல் - அடையாளப் பொருளைத் தருவாயே ஆனால்; புகன்ற யாவும் - என்னால் கூறப்பட்டவை யாவற்றையும்; கைநிலை - கையின்கண்ணே உள்ள; நெல்லிகனியில் - நெல்லிக் கனியைப் போல; காட்டுகேன் - நிரூபித்துக் காண்பிப்பேன் (அப்போது); பொய்நிலை - தரிக்கும் என்றது பொய்யான தன்மையை; காண்டி - பார்ப்பாய்.
உணர்ந்துழியும் என்பதில் உள்ள உம்மை தொகையாக உள்ளது. விடைதந்து அடையாளப் பொருள் வழங்க வேண்டும் என்பது அனுமன் வேண்டுகோள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you say that one in this state will bear it
- even when he learns the true state of things, then give me leave and a token, and
- you will see that it is false: all I have said
- I will show you as plain as a gooseberry on the palm of your hand.
What the poem says
Aṉumaṉ asks Cītai to give him leave to go and a token to carry to Irāmaṉ. If she doubts that Irāmaṉ will act at once when he hears the news, events will prove her wrong.
'Like a gooseberry in the palm' is a Tamil and Sanskrit idiom for something perfectly plain to see.