கம்பராமாயணம் 5464 · சுந்தர 6.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவி - தெய்வத்தன்மையுடையவளே; அன்னை - தாயே!; நீ - நீ; தீர்த்தனும் - தூய்மையுடைய இராமபிரானும்; கவிக்குலத்து இறையும் - குரங்குகளின் தலைவனான சுக்கிரீவனும்; நின் வார்த்தை கேட்டு - உன்னுடைய சொற்களைக் கேட்டு; உவப்பதன் முன்னர் - மகிழ்ச்சியடைவதற்கு முன்பே; மாக்குரங்கு - பெரிய குரங்குக் கூட்டம்; மாக்கடல் தூர்த்தன - கரிய கடலை மேடு பண்ணி (அதன் வழியே வந்து); இலங்கையைச் சூழ்ந்து - இலங்கையை முற்றுகை இட்டு; ஆர்த்தது - ஆரவாரிப்பதை; கேட்டு - செவியில் ஏற்று; உவந்து இருத்தி - மகிழ்ச்சியுடன் இருப்பாயாக.
இராமன் உன்மொழி கேட்டு மகிழ்வதன் முன் நீ, குரங்குகளின் ஆரவாரம் கேட்டு மகிழ்க. தீர்த்தன் - திருமால். இங்கு அச் சொல் இராமபிரானைக் குறிக்கிறது. தீர்த்தன் என்று அறிந்ததோ (திருவவதாரம் 114) இறை - அரசன். மன்னவன் மக்கட்கு இறை (திருக்குறள்) ஆர்த்தது - தொழிற் பெயர். மாக்கடல் கருங்கடல். பெருங்கடல் என்றும் கொள்ளலாம். ஆழ்கடல் என்பதே பலபிரதிகளில் காண்கின்றது. இப்பாடலை விரைவு நவிற்சியணி என்று கூறி அலங்கார சாத்திரத்தை விரிவுபடுத்தலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the Pure One and the king of the monkey race, O goddess, hear your
- words and rejoice, the great monkeys, having filled up
- the great sea, will surround Ilaṅkai
- and roar; hear it and be glad, mother!
What the poem says
Aṉumaṉ promises that the monkey army will move so fast that Cītai will hear their war-cries around Ilaṅkai almost before Irāmaṉ and Cukkirīvaṉ have finished rejoicing at her message.
The monkeys will fill in the sea to cross it, foreshadowing the causeway built later in the epic. The commentary calls the verse an example of the figure of speed.