கம்பராமாயணம் 5465 · சுந்தர 6.72

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நங்கை - அம்மையே! எண்ண அரும் பெரும் படை - கணக்கிட முடியாத பெருஞ்சேனை; நாளை - நாளைய தினத்தில்; இந்நகர் நண்ணிய பொழுது - இந்த நகரை யடைந்த போது; அதன் நடுவண் - அந்தச் சேனையின் நடுவில்; விண் உறு கலுழன் மேல் - விண்ணிலே பறக்கும் கருடன் மேலே; விளங்கும் - பொலிவு பெறுகின்ற; விண்டுவின் - திருமாலைப் போல; கண்ணனை - இராம பிரானை; என் - என்னுடைய; நெடும் வெரிநில் - பெரிய தோள்களில்; நீ காண்டி - நீ பார்ப்பாயாக.

எண்ணுதல் - கணக்கிடுதல். கருதுதல் என்றும் கூறலாம். கலுழன் - கருடன். கண்ணன் - திருமால். இங்கே இராமபிரானைக் குறிக்கிறது. கவிச்சக்கரவர்த்தி பல இடங்களில் இராமபிரானைக் கண்ணன் என்று குறிப்பார். 'கண்ணனைக் கண்ணில் நோக்கி கனிந்தனன்' (கம்ப. 1965) கண்ணன் - என்பது பாகதச் சொல் என்பர் பேராசிரியர். (கருங்கண்ணனை - கோவையார்) இதை வடமொழித் திரிபு என்று கூறுவது பிழை. காண்டி - ஆல் ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the vast army beyond counting reaches this city tomorrow,
  2. in its midst, lady, as Viṣṇu shines
  3. on Garuḍa soaring in the sky,
  4. you will see the dark-eyed lord on my long back!

What the poem says

Aṉumaṉ pictures Irāmaṉ arriving at Ilaṅkai at the head of a countless army, riding on Aṉumaṉ's own back just as Viṣṇu rides Garuḍa, his eagle mount.

Irāmaṉ is here called Kaṇṇaṉ, a name of Viṣṇu. The commentary notes that the poet often uses it for Irāmaṉ and argues that it is a Prakrit word, not a corruption of Sanskrit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇṇarum perum paṭai nāḷai in nakar
naṇṇiya poḻutu ataṉ naṭuvaṇ naṅkai! nī
viṇ uṟu kaluḻaṉmēl viḷaṅkum viṇṭuvil
kaṇṇaṉai eṉ neṭu verinil kāṇṭiyāl!