கம்பராமாயணம் 5466 · சுந்தர 6.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இளவல் - இளைய பெருமாள்; அங்கதன் தோள்மிசை - அங்கதன் தோளின் மேலே; அம்மலை - அந்த உதயமலையில், பொங்கும் - கிளர்ந்து எழுகின்ற; வெங்கதிர் எனப் பொலிய - வெம்மையான சூரியனைப் போல விளங்கித் தோன்ற; போர்ப்படை - போர் செய்யும் வானரப்படை; இங்கு வந்து - இந்த இலங்கைக்குள் வந்து; இறுக்கும் - தங்கும்; நீ - நீ; இடரும் - துன்பத்திலிருந்தும்; சங்கையும் - அச்சத்திலிருந்தும்; நீங்குதி - நீங்குவாயாக. (இனிமேல்); தனிமை நீங்குவாய் - தனித்திருப்பதிலிருந்தும் நீங்குவாய்.
இளைய பெருமான் செந்நிறம் உடையவன். ஆகையால், அவன் பொங்கு வெங்கதிர் என்று கூறப் பெற்றான். சங்கை என்னும் சொல் அச்சப் பொருள் தந்தது. சென்னை அகராதி உடன்படும். 'நிருதர் என்னும் சங்கையும் இல்லாவண்ணம்' என்று நாகபாசப் படலம் கூறும். (கம்ப. 8052)
ஆங்கிலம் · English translationAI
Translation
- On Aṅkataṉ's shoulders the younger brother, like the hot sun
- blazing over that mountain, will shine, and the war-host
- will come here and lay siege; you, from suffering, doubt
- and fear, be free! You will be alone no longer.
What the poem says
Aṉumaṉ adds that Ilakkuvaṉ will ride on Aṅkataṉ's shoulders, blazing like the sun rising over the eastern mountain.
The monkey army will besiege Ilaṅkai, and Cītai will be free of suffering, fear and loneliness. The commentary notes that Ilakkuvaṉ is described as fair or ruddy, hence the sun image.