கம்பராமாயணம் 5478 · சுந்தர 7.1

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வடக்கு உறும் - வடக்கு முகமாகச் செல்லும்; நினைப்பினில் - நினைப்போடு; நிமிர்ந்தான் - அதற்கு ஏற்பப் பெரியவடிவத்தை எடுத்துக் கொண்டு; பொறிக்குல மலர்ப்பொழில் இடை - வண்டுக்கூட்டங்கள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த அசோகவனத்திடையே; கடிது போவான் - விரைந்து செல்பவனாகிய அனுமன்; சிறு தொழில் முடித்து அகல்தல் - (பிராட்டியைக் கண்ட இந்தச் சிறு செயலை மட்டும் முடித்துக் கொண்டு போவது; தீது எனல் தெரிந்தான் - (தன் ஆற்றலுக்குக்) குறைவு என்று உணர்ந்து; மறித்தும் செயற்கு உரிய ஓர் காரியம் மதித்தான் - மீண்டும் தான் செய்வதற்குப் பொறுப்பான ஒரு செயலைச் செய்ய எண்ணினான்.

பிராட்டியைக் கண்டு பேசிப் போவதாகிய செயல், தனது ஆண்மைக்குக் குறைவு என்பதும், வேறு ஒரு பெருஞ் செயலைச் செய்ய வேண்டும் என்பதும் அனுமனது கருத்து. பொறி - புள்ளி. வண்டைக் குறித்தது; ஆகுபெயர். பொறி - வண்டு; பொறி கலந்து பொழில். (தேவாரம்) 'வண்டுக் கூட்டம் எழ' என்பது வைகறைப் பொழுதை உணர்த்துகின்றது. சிறுத்தொழில் வலித்தல் விகாரம். சிறுக்குட்டன். சிறுத் தொண்டன் என்பன போன்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He drew himself up, minded to head north,
  2. moving swiftly through the grove of flowers swarming with bees;
  3. he saw that to finish a small task and leave would be poor;
  4. and he weighed a further deed that was fitting to be done.

What the poem says

The Poḻil Iṟutta Paṭalam, the canto of the wrecking of the grove, begins. Aṉumaṉ has grown large again and is about to head north to Irāmaṉ.

As he strides through the flowering aśōka grove, he feels that merely finding Cītai is too small a feat for someone of his strength. He decides there is something more he must do before he leaves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṟikkoṭu vaṭakku uṟum niṉaippiṉil nimirntāṉ
poṟik kula malarp poḻiliṭaik kaṭitu pōvāṉ
'ciṟuttoḻil muṭittu akaltal tītu’ eṉal terintāṉ;
maṟittum or ceyaṟku uriya kāriyam matittāṉ.