கம்பராமாயணம் 5479 · சுந்தர 7.2

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈனம் உறு பற்றலரை எற்றி எயின் மூதூர்
மீன நிலயத்தின் உற வீசி விழி மானை
மானவன் மலர்க் கழலின் வைத்தும் இலென்; என்றால்
ஆனபொழுது எப்பரிசின் நான் அடியன் ஆவேன்.

பொருள் · Meaning in Tamil

ஈனம் உறும் பற்றலரை எற்றி - இழிவான செயல்கள் பொருந்திய பகைவர்களாகிய அரக்கர்களைத் தாக்கி அழித்து; எயில் மூதூர் - மதில்கள் சூழ்ந்த இந்த இலங்கை நகரை; மீனநிலையத்தின் உகவீசி - மீன்களுக்கு இருப்பிடமான கடலில் சிதறி விழும்படி வீசி எறிந்து; விழி மானை - கண் பார்வையால் மானை ஒத்த பிராட்டியை; மானவன் மலர்க் கழலில் வைத்தும் இலென் என்றால் - இராமபிரானுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளில் (காணிக்கை போல) வைத்து வணங்கவில்லை என்றால்; ஆனபொழுது - அந்நிலையில் நான் உள்ள போதும்; எப்பரிசின் நான் அடியன் ஆவேன் - எவ்விதத்தில் நான் இராமபிரானுக்கு உண்மை அடியவனாக ஆவேன்?

தலைவனது விருப்பத்தை நிறைவேற்றுவதே உண்மை அடியவனின் கடமை. இராமபிரானுடைய பகைவர்களை ஒழித்தலை, அடியவனாகிய அனுமன், தனது கடமையாகக் கருதினான். மான்விழி என்பது விழிமான் என மாறியது; இலக்கணப் போலி - புறநகர் வாயில் என்பன போல. மீனநிலையம் - கடல். புதிய சொல்லாட்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If I do not strike down the base enemies, hurl the walled old city
  2. to scatter in the home of the fishes, and place the doe-eyed lady
  3. at the flower feet of the noble one, then
  4. in what way at all shall I be his servant?

What the poem says

Aṉumaṉ reasons with himself. A true servant fulfils his master's wishes. He feels he has no claim to be Irāmaṉ's servant unless he defeats the demons, flings their walled city into the sea and lays Cītai at Irāmaṉ's feet.

'The home of the fishes' is a new coinage for the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṉam uṟu paṟṟalarai eṟṟi eyiṉ mūtūr
mīṉa nilayattiṉ uka vīci viḻi māṉai
māṉavaṉ malark kaḻaliṉ vaittum ileṉ; eṉṟāl
āṉa poḻutu eppariciṉ nāṉ aṭiyaṉ āvēṉ.