கம்பராமாயணம் 5480 · சுந்தர 7.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வஞ்சனை அரக்கனை - கபடத்தன்மை பொருந்திய அரக்கனாகிய இராவணனை; நெடு வாலால் - எனது நெடிய வாலினால்; அஞ்சினுடன் அஞ்சு தலை தோள் உற - பத்துத் தலைகளும் இருபது தோள்களும் ஒன்று சேரும் படி; நெருக்கி அடைத்து - நெருக்கிக் கட்டி; வெம் சிறையில் வைத்தும் இலென் - கொடிய சிறைக்காவலில் வைத்தேனும் அல்லேன்; வென்றும் இலென் - போரில் அவனை வென்றேனும் அல்லேன்; என்றால் - என்று சொல்லுவமானால்; ஒருவர்க்கு ஒருவர் தஞ்சம் என்றல் - ஒருவருக்கு ஒருவர் பற்றுக்கோடு என்ற உறுதிமொழி கூறல்; தகும் அன்றோ - தகுதி உடையதாகுமல்லவோ (தகுதி உடையதாகாது என்றபடி). தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றது, இராமபிரானும் சுக்கிரீவனும் உற்ற துணையாக நட்புக் கொண்டதைக் குறிப்பது. தன் அரசனான சுக்கிரீவனுக்கு உள்ள பொறுப்பை அனுமன் தன்மேல் ஏற்றிக் கொண்டதாகும். அசைத்தல் - கட்டுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If I do not crush the deceitful demon and, with my long tail,
- binding his ten heads and shoulders together,
- put him in a cruel prison, nor defeat him, then
- is it fitting to say that each is the other's refuge?
What the poem says
Aṉumaṉ imagines tying up Irāvaṇaṉ's ten heads and twenty arms with his tail and throwing him into prison. Unless he does something of that kind, the pact of mutual refuge between Irāmaṉ and Cukkirīvaṉ would mean nothing.
As Cukkirīvaṉ's minister, he takes his king's side of the pact on himself.