கம்பராமாயணம் 5481 · சுந்தர 7.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வலத்தால் - என் வலிமையினால்; கண்டநிருதக்கடல் - கண்ணுக்குத் தெரிகின்ற அரக்கர் கூட்டத்தை; கலக்கினென் - கலங்கச் செய்தவனாய்; திண்திறல் அரக்கனும் இருக்க - மிக்க வலிமை உடைய அரக்கனாகிய இராவணனும் பார்த்துக் கொண்டிருக்க; ஓர் திறத்தின் - ஒப்பற்ற எனது ஆற்றலினால்; மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்து - (அவனது பட்டத்து அரசியான) மண்டோதரியின் மலரணிந்த கூந்தலைப் பற்றி; சிறைகொண்டு வைத்திடுதலில் - சிறையாகக் கொண்டு வைப்பதில்; குறையும் உண்டோ - குறைவு உள்ளதோ? (இல்லை என்றபடி)
இராவணனைச் சிறைவைத்தலை விட அவன் மனைவியைச் சிறையில் அடைத்தலே நிறைவானதாக இருக்கும் எனக் கருதுகின்றான் அனுமன். மிகுதியையும் பெருமையையும் குறிக்க அரக்கர் கூட்டம் கடல் எனப்பட்டது. அரக்கர் கூட்டத்தைக் கடல் என்றதற்கு ஏற்பக் கலக்கி என்ற சொல் பொருத்தமாக வந்தது. மண்டோதரி மந்த உதரத்தவள் சுருங்கிப் படிந்த வயிற்றினள் என்று பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Churning by my might the sea of demons in sight,
- while the mighty demon himself looks on, by my strength alone
- to seize Maṇṭōtari by her flowered hair
- and put her in prison, would that fall short in any way?
What the poem says
Aṉumaṉ's imagination runs further. He could throw the demon host into turmoil and, while Irāvaṇaṉ looked on, drag off his chief queen Maṇṭōtari by her hair and imprison her.
The commentary notes that to him this seems an even fuller revenge than imprisoning Irāvaṇaṉ, and it explains Maṇṭōtari's name as 'she of the slender waist'.