கம்பராமாயணம் 5482 · சுந்தர 7.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இவ் அரக்கரை உலைத்து ஒட்டி - இந்த அரக்கர்களை எல்லாம் வருத்தி ஓடச் செய்து; உரிமை எல்லாம் - நான், இராமபிரானுக்கு அடியனாகும் உரிமைத் தன்மை எல்லாம்; காட்டும் இதுவே கருமம் - வெளிப்படையாகக் காட்டுகின்ற இதுவே நான் செய்யத் தக்க செயல்; இனி, மீட்டும் எண்ணும் வினை - இனிமேல், மறுபடியும் ஆலோசிக்க வேண்டிய காரியம், வேறும் உளது அன்று - வேறு ஒன்றும் இல்லை; அன்னவர் - அந்த அரக்கரை; கடும் போர் மூட்டும் வகை - கொடிய போரில் மூளச் செய்யும் விதம்; யாவது கொல் என்று முயல்கின்றான் - எதுவாகும் என்று நினைத்து (அதற்குரிய உபாயத்தை) ஆலோசிப்பவனாயினான் அனுமன்.
அரக்கரைப் போர் மூட்டி அழிப்பதே தான் செய்யத்தக்க செயல் என்றும், அதுவே அடியவனாகக் காட்டுதற்குரியதென்றும் அனுமன் எண்ணுகின்றான். ஆல், கொல், அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There is no other deed left now to think over:
- to rout these demons, crush them, and show my whole right as his servant,
- that is the task; 'how can I stir them
- into fierce battle?' so he set about it.
What the poem says
Aṉumaṉ makes up his mind. The only thing left to do is to rout the demons and prove himself Irāmaṉ's true servant.
The question now is how to provoke them into a fight.