கம்பராமாயணம் 548 · பால 9.82

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டு ஓ?
மை வண்ணத்து அரக்கி போரின் மழை வண்ணத்து அண்ணல் ஏ! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

பொருள் · Meaning in Tamil

இவ் வண்ணம் - இச் செய்தியே; நிகழ்ந்த வண்ணம் - (முற்காலத்து) நடந்த முறையாகும்; இனி இந்த - இனிமேல் (நீ இவ்வுலகில் பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களைப் பாதுகாத்தல் என்பது ஏற்பட்ட பிறகு) இந்த; உலகுக்கு எல்லாம் - உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம்; உய்வண்ணம் அன்றி - (துன்பம் நீங்குக) கடைத் தேறும் வழியே அல்லாமல்; மற்று ஓர் துயர் வண்ணம் - அதற்கு வேறானதொரு துன்பத்தின் வழியை; உறுவது உண்டோ - அடைதல் கூடுமோ? (கூடாது); மழை வண்ணத்து அண்ணலே - மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே! அங்கு - வருகிற வழியில் (வனத்தில்); மைவண்ணத்து அரக்கி - அஞ்சனம் போலும் கரிய நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு; போரில் - செய்த போரில்; உன் கைவண்ணம் கண்டேன் - உன் கையின் திறத்தைப் (வில்லினது ஆற்றலை) பார்த்தேன்; இங்குக் கால் வண்ணம் - இந்த இடத்தில் உன் திருவடியின் திறத்தை; கண்டேன் - பார்க்கலானேன்.

மழை வண்ணத்து அண்ணல்: கண்டாரின் மனக் கொதிப்பை நீக்கும் குளிர்ந்த தன்மையுடையவன்; கருநிறம் பொருந்தியவன்; கைம்மாறு கருதாது கருணையை மழையாகப் பொழிபவன் இராமன். மைவண்ணத்து அரக்கி: பொய், கொலை, வஞ்சனை முதலான தீய பண்புகளுக்கு உறைவிடமானவள் தாடகை - இருவரின் கருநிறத்துக்கும் வேறுபாடு காட்டப்பெற்றுள்ளது. கை வண்ணமும் கால் வண்ணமும்: முறையே தீயவர்களை அழித்தலும் நல்லவர்களைக் காத்தலும் ஆகிய இருவகைத் திறன்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. This is how it came about. From now on, for all this world,
  2. can there be any way but the way of salvation — can any way of sorrow come?
  3. O lord, colour of the rain cloud! In the battle with the ogress, colour of collyrium,
  4. I saw there the wonder of your hand; here I have seen the wonder of your foot.

What the poem says

This is among the best-loved verses in Kampaṉ. Vicuvāmittiraṉ ends the story and tells Irāmaṉ that now he has come into the world, there can be nothing but salvation for it. The verse plays on vaṇṇam, which means colour, manner and excellence.

Irāmaṉ is dark like a rain cloud: cooling and generous, pouring out grace without asking anything back. Tāṭakai, the ogress he killed on the way, was dark like collyrium, the black of lying, murder and deceit. In that fight the sage saw what Irāmaṉ's hand could do, which is destroy the wicked. Here he has seen what his foot can do, which is redeem and protect the good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ivvaṇṇam nikaḻnta vaṇṇam, iṉi inta ulakukku ellām
uyvaṇṇam aṉṟi, maṟṟu ōr tuyar vaṇṇam uṟuvatu uṇṭō?
mai vaṇṇattu arakki pōril maḻai vaṇṇattu aṇṇalē! uṉ
kai vaṇṇam aṅkuk kaṇṭēṉ, kāl vaṇṇam iṅkuk kaṇṭēṉ.