கம்பராமாயணம் 5499 · சுந்தர 7.22

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சாகம் நெடு மாப் பணை தழைத்தன தனிப்
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும்
மாகம் நெடு வான் இழிந்து புனல் வாரும்
மேகம் எனல் ஆய; நெடு மா கடலின் வீழ்வ.

பொருள் · Meaning in Tamil

தனிப் போர் நாகம் அனையான் எறிய - ஒப்பற்ற போரில் சிறந்த யானை போன்ற வலிமை பெற்ற அனுமன் வீசி எறிந்ததனால்; நெடு மாப் பணை சாகம் தழைத்தன - நீண்ட பெரிய கிளைகளும் இலைகளும் தழைத்தனவும்; மேல் நிமிர்வ - மேலே எழுந்து விளங்குவனவும்; நெடு மாகடலின் வீழ்வ - பிறகு நெடிய பெரிய கடலில் வீழ்வனவுமாகிய மரங்கள்; நாளும் - எல்லாக் காலத்தும்; நெடு மாக வான் இடை இழிந்து - மிகப் பெரிய ஆகாயத்திலிருந்து கீழே இறங்கி, புனல் வாரும் மேகம் எனல் ஆய - கடல் நீரை முகப்பனவான மேகம் என்று சொல்லத்தக்கன வாயின. மாகம் - வானம்; மாக வான் - ஒரு பொருட் பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The trees with long great branches in leaf, hurled up
  2. by him who is like a matchless war elephant, rising high,
  3. and then falling into the vast long sea, became like
  4. clouds that come down from the high, wide sky to draw up water.

What the poem says

Aṉumaṉ flings the leafy trees high, and they come crashing down into the ocean.

As they plunge into the sea they look like clouds coming down from the sky to draw up water, as clouds were believed to drink from the ocean before bringing rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cākam neṭu māp paṇai taḻaittaṉa taṉip pōr
nākam aṉaiyāṉ eṟiya mēl nimirva nāḷum
māka neṭu vāṉiṭai iḻintu puṉal vārum
mēkam eṉal āya; neṭu mā kaṭaliṉ vīḻva.