கம்பராமாயணம் 5498 · சுந்தர 7.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேன் உறைதுளிப்ப - தேன் துளிகள் சிந்தவும்; நிறை புள்பல சிலம்ப - அங்கு நிறைந்து வாழ்ந்து வந்த பறவைகள் ஒலிக்கவும்; பூ நிறை மணித் தரு - மலர்கள் நிறைந்த இரத்தினமயமான மரங்கள்; விசும்பின் இடை போவ - ஆகாயத்தினிடத்தே போவனவாய்; மீன் முறை நெருக்க - (அவ் விண்ணில் உள்ள) நட்சத்திரங்கள் முறையே நெருக்கவும்; ஒளி வாளொடு வில் வீச - ஒளியானது வாளொடு போட்டியிட்டு ஒளி வீசவும்; வானிடை நடாய நெடு மானம் எனல் ஆய - ஆகாயத்தில் செல்லும் பெரிய விமானம் என்று சொல்லத்தக்கனவாயின. அனுமன் வீசி எறிந்த மரங்களில் உள்ள பூக்களும், அவற்றில் உள்ள மணிகளும் வீசும் ஒளி வாள் போல, விளங்கின. மானம் - விமானம்; முதற் குறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Dripping drops of honey, with the many birds that filled them crying out,
- the jewelled trees full of flowers, travelling through the sky,
- crowding against the stars in their rows, their brightness flashing like swords,
- became like great celestial chariots driven through the sky.
What the poem says
The jewelled, flowering trees sail through the sky dripping honey, with the birds still in their branches calling out.
Jostling among the stars and flashing like swords, they look like the flying chariots, the vimāṉas, in which the gods travel.