கம்பராமாயணம் 5497 · சுந்தர 7.20

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
தண்ண மழைபோல் இடை தழைந்தது சலத்தால்
அண்ணல் அனுமான்'அடல் இராவணனது அந்நாள்
விண்ணும் ஒரு சோலை உளதாம்'என விதித்தான்.

பொருள் · Meaning in Tamil

அந் நாள் எறிந்தன - அந்த காலத்தில், (தான்) பிடுங்கி எறிந்தனவான; எண் இல் தரு கோடிகள் செறிந்து - அளவிறந்த மரங்களின் கூட்டங்கள் நெருங்கி; தண்ணென் மழை போல் - குளிர்ந்த மேகம் போல; இடைதழைந்தது - விண்ணிடத்தில் தழைந்து தோன்றியது; (அதனால்) அண்ணல் அனுமான் - பெருமை பொருந்திய அனுமான்; சலத்தால் - கோபத்தால்; அடல் இராவணனது - வலிமை மிக்க இராவணனுடைய; ஓர் சோலை - அசோகவனச் சோலை; விண்ணினும் உளது ஆம் என விதித்தான் - வானத்தும் உள்ளது என்று சொல்லும் படிச் செய்தான்.

கோடி - கூட்டம்: 'சீவகோடிகள்' என்பது போல. இராவணனுக்கு வானத்திலும் ஒரு சோலை இருக்கிறது என எண்ணும்படியாக அசோகவனத்து மரங்களை அனுமன் விண்ணிலே சிதறி எறிந்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The countless myriads of trees he hurled, packed close,
  2. spread out in the sky like cool rain-clouds; in his fury
  3. the noble Aṉumāṉ, that day, made it so that mighty Irāvaṇaṉ
  4. was said to have a grove in the sky as well.

What the poem says

So many trees fly through the air that they hang in the sky like a bank of cool rain-clouds.

The poet jokes that Aṉumaṉ, in his fury, has given Irāvaṇaṉ a second pleasure-garden up in the heavens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ il taru kōṭikaḷ eṟintaṉa ceṟintē
taṇṇeṉ maḻaipōl iṭai taḻaintatu calattāl
aṇṇal aṉumāṉ'aṭal irāvaṇaṉatu annāḷ
viṇṇum oru cōlai uḷatu ām'eṉa vitittāṉ.