கம்பராமாயணம் 5496 · சுந்தர 7.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேனில் விளையாடு சுடரோனின் - கோடைக்காலத்தில் முழு உற்சாகத்தோடு காய்கின்ற சூரியனைப் போல; ஒளி விம்மும் வானின் இடை - ஒளி மிகுகின்ற ஆகாயத்தில்; வீசிய இரும்பணை மரத்தால் - (அனுமன்) வீசி எறிந்த மிகப் பெரிய மரங்களால்; தானவர்கள் மாளிகை - அரக்கரது மாளிகைகள்; வான இடியால் ஒடியும் மால் வரைகள் மான - ஆகாயத்திலிருந்து விழும் இடியினால் உடைந்த பெரிய மலைகளைப் போல், தகர்ந்து பொடியான - இடிந்து பொடிபட்டன.
மரங்களால் தாக்குண்டு விழுந்த அரக்கர் மாளிகைகளுக்கு, இடிகளால் தாக்குண்டு அழியும் மலை ஒப்பு. உவமை அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- By the great trees with huge branches hurled through the sky,
- which blazed like the sun at play in the hot season,
- the mansions of the demons were shattered to dust,
- like great mountains split by thunderbolts from the sky.
What the poem says
The great trees Aṉumaṉ throws blaze through the bright sky like the summer sun.
When they land on the demons' palaces they smash them to dust, just as thunderbolts split mountains.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṉil viḷaiyāṭu cuṭarōṉiṉ oḷi vimmum
vāṉiṉiṭai vīciya arum paṇai marattāl;
tāṉavarkaḷ māḷikai takarntu poṭi āya;
vāṉa iṭiyāl oṭiyum māl varaikaḷ māṉa.