கம்பராமாயணம் 5501 · சுந்தர 7.24

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மணிகொள் குட்டிமம் மட்டித்து - ரெத்தினங்கள் பதிக்கப் பெற்ற திண்ணைகளைத் தகர்த்து; மண்டபம் துணிபடுத்து - மண்டபங்களைத் துண்டுதுண்டுகளாக உடைத்து; அயல் வாவிகள் தூர்த்து - பக்கத்தில் உள்ள தடாகங்களைத் தூர்த்து; ஒளிர் திணி சுவர்த்தலம் சிந்தி - ஒளி விளங்குகின்ற வலிய சுவர்களின் இடங்களை இடித்துத்தள்ளி; செயற்கு அரும் பணி படுத்து - செய்வதற்கு அரிய வேலைப்பாடு அமைந்த பொருள்களை எல்லாம் அழித்து; உயர் குன்றம் படுத்து - உயர்ந்த குன்றுகளையும் அழித்து.

இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். குட்டிமம் - கல்லால் அமைந்த மேடை; குன்றம் - செய்குன்று; சோலையில் செயற்கை அழகில் அமைந்த கட்டிடங்கள் முதலியன அழிக்கப்பட்டன என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He smashed the jewelled terraces, broke the pavilions
  2. to pieces, filled in the pools beside them, scattered
  3. the shining, solid walls, ruined the works
  4. too hard to make, and flattened the tall hillocks.

What the poem says

This verse and the next form a single sentence describing how Aṉumaṉ wrecks the grove's buildings and landscaping.

He destroys the jewelled platforms, the pavilions, the ponds, the walls, the fine craftsmanship and the artificial hills.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇi koḷ kuṭṭimam maṭṭittu maṇṭapam
tuṇi paṭuttu ayal vāvikaḷ tūrttu oḷir
tiṇi cuvarttalam cintic ceyaṟku arum
paṇi paṭuttu uyar kuṉṟam paṭuttu arō.