கம்பராமாயணம் 5506 · சுந்தர 7.29

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீசின பவளமாக்கொடி - அனுமனால் வீசி எறியப்பட்ட பவளம் போன்று சிவந்த கொடிகள்; பல் மழை துவளும் மின் என - பல மேகங்களில் துவண்டு தோன்றும் மின்னல்கள் போல; சூழ் வரை சுற்றிட - இலங்கையைச் சூழ்ந்திருந்த மலைகளில் சுற்றிக் கொள்ள; சேர்ந்தன திவளும் பொன் பணை மாமரம் - எறியப்பட்டு மலைகளைச் சேர்ந்தனவான, விளங்குகின்ற பொன் மயமான கிளைகளை உடைய பெரிய மரங்கள்; கவள யானையின் ஓடையின் காந்த - பெரிய உருண்டைகளாகத் தன் உணவை உண்ணும் யானையின் முக படாம் போல ஒளி வீசி விளங்க.

மலைகளைச் சுற்றிக் கொடிகள் மேகங்களில் தோன்றும் மின்னலைப் போன்றன. சுற்றி அமைந்த மரங்கள் யானையின் முக படாம் போன்றன. ஓடை - யானையின் முகத்தில் அழகுக்காக மூடப்படும் முகபடாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great coral-red creepers he flung, like lightning
  2. twisting among many clouds, wound round the encircling hills,
  3. and the great trees with shining golden boughs that landed there
  4. blazed like the face-ornaments of elephants fed on rice-balls.

What the poem says

Coral-red creepers hurled by Aṉumaṉ wrap around the hills that ring Ilaṅkai, like lightning twisting through the clouds.

The golden-branched trees that land on the hills gleam like the jewelled face-plates worn by royal elephants, which are fed by hand with balls of rice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pavaḷa mākkoṭi vīciṉa pal maḻai
tuvaḷum miṉ eṉac cuṟṟiṭac cūḻ varai
tivaḷum poṉpaṇai mā maram cērntaṉa
kavaḷa yāṉaiyiṉ ōṭaiyil kāntavē.