கம்பராமாயணம் 5531 · சுந்தர 7.54

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலங்கை தன்மேல் விட்டனன் - (பேர்த்தெடுத்த அம்மண்டபத்தை) இலங்கை நகர் மீது வீசி எறிந்தான்; (அதனால்) விண் உற விரிந்த மாடம் - வானத்தை அளாவும்படி பரவியிருந்த மாளிகைகள்; பட்டன பொடிகள் ஆன - மோதப் பட்டனவாய்ப் பொடிகளாக உதிர்ந்தன; பாங்கு நின்ற பகுத்தன - பக்கத்தில் நின்ற கட்டிடங்களும் பிளவுபட்டன; பொறிகள் வீழச் சுட்டன - நெருப்புப் பொறிகள் விழுவதனால், பொருள்களையெல்லாம் சுட்டெரித்தன; வீரர் அரக்கர் தாமும் துளங்கினர் கெட்டனர் - எதற்கும் கலங்காத அரக்கரில் உண்மையான வீரர்களும் அழிந்தொழிந்தார்கள்; கேடு சூழ்ந்தார் பிழைப்பரோ ? - பிறர்க்குக் கேடு செய்தவர்கள் அந்தத் தீவினைப் பயனை அனுபவியாது தப்புவார்களோ ? (தப்ப மாட்டார்கள்).

“கேடு சூழ்ந்தார் பிழைப்பரோ” என்ற பொதுப் பொருளைக் கொண்டு, “அரக்கர் கெட்டனர்” என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டது. வேற்றுப் பொருள் வைப்பணி. அம்மா என்ற இடைச்சொல் இரக்கத்தைச் சுட்டியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He hurled it down upon Ilaṅkai; the mansions that spread up to the sky
  2. were struck and crumbled to dust; those standing beside them split apart;
  3. the falling sparks burned everything; the rākṣasas trembled,
  4. and their heroes perished — alas! Can those who plot harm escape?

What the poem says

Aṉumaṉ throws the uprooted hall onto the city. Towering mansions are smashed to powder, neighbouring buildings crack, and sparks set everything ablaze. Even the bravest rākṣasas are killed.

The last line states a general truth — those who plot evil cannot escape its consequences — to support the particular event, a figure Tamil poetics calls vēṟṟup poruḷ vaippu. The exclamation 'ammā' expresses pity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṭṭaṉaṉ ilaṅkai taṉmēl; viṇ uṟa virinta māṭam
paṭṭaṉa poṭikaḷ āṉa; pakuttaṉa pāṅku niṉṟa;
cuṭṭaṉa poṟikaḷ vīḻat, tuḷaṅkiṉar arakkar tāmum;
keṭṭaṉar vīrar ammā! piḻaipparō kēṭu cūḻntār.