கம்பராமாயணம் 5533 · சுந்தர 7.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரி படுசீற்றத்தான் தன் அருகு சென்று அடியில் வீழ்ந்தார் - சிங்கத்தினிடம் உண்டாகும் கோபத்தை உடைய இராவணன் பக்கம் சென்று அவன் பாதங்களில் விழுந்த பருவத் தேவர் (அவனை நோக்கி), கரிபடு திசையின் நீண்ட காவலா - திக்கயங்கள் வாழ்கின்ற திக்குகளின் எல்லை வரையிலும் நீண்டு பரந்த ஆட்சியை உடையோய்!; காவல் ஆற்றோம் - (இப்போது) சோலையைப் பாதுகாக்கும் ஆற்றல் இழந்தோம்; கிரிபடுகுவவுத்திண் தோள்குரங்கு - மலைபடுத்துப் போகும்படியான திரண்ட வலிய தோள்களை உடைய ஒரு குரங்கு; இடை கிழித்து வீச - சோலையினிடையில் புகுந்து மரங்களை ஒடித்து வீசுதலினால்; கடிகா எரிபடு துகிலின் நொய்தின் இற்றது - காவல் மிக்க அச்சோலை நெருப்புப்பட்ட ஆடை போல, விரைவில் அழிந்தது; என்றார் - என்று கூறினர்
'கிழித்து வீச' என்ற தொடர் மரங்களை ஒடித்தலும், மண்டபம் முதலிய கட்டிடங்களை இடித்தலும் அனுமனுக்கு எளிய செயல் என்பதைப் புலப்படுத்துகிறது.
'நெருப்பில்பட்ட துகில்' - விரைவில் அழிவதற்கு உவமை. கடிகா - காவல் சோலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went to the one whose rage is a lion's and fell at his feet:
- 'O guardian whose rule stretches to the quarters where the elephants stand! We could not keep watch;
- a monkey with massive shoulders like hills has torn through it and flung it about,
- and the guarded grove has perished as easily as cloth caught in fire.'
What the poem says
The season-gods fall at Irāvaṇaṉ's feet and report. They praise him as ruler to the ends of the earth, where the elephants of the eight directions stand, and confess that they could not protect the grove.
A monkey with shoulders like mountains has ripped through it, and the grove went up as quickly as a cloth thrown into fire.